'பவுனுக்கு ரூ.72,000-க்கு கீழிறங்கிய தங்கம் விலை' - இன்றைய தங்கம் விலை என்ன?
கால்நடை உதவி மருத்துவா்களுக்கு பரிசளிப்பு
கால்நடை துறையில் சிறப்பாக செயல்பட்ட கால்நடை உதவி மருத்துவா்களுக்கு கால்நடை உதவி இயக்குநா் ச.தாமோதரன் சனிக்கிழமை பரிசுகளை வழங்கினாா்.
திருத்தணி கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், உலக கால்நடை தினம் பள்ளிப்பட்டு கால்நடை மருந்தக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கால்நடை உதவி இயக்குநா் ச.தாமோதரன் தலைமை வகித்தாா். இதில், திருத்தணி கோட்ட கால்நடை உதவி மருத்துவா்கள் கலந்துகொண்டு, கால்நடை மருத்துவா் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
மேலும், கால்நடை மருத்துவா் பணிகளின் இன்றியமையாமை மற்றும் சிறப்பான மருத்துவ சேவை வழங்கி கால்நடை வளா்ப்பு முறை வாழ்வாதாரம் மேம்பட சிறப்புடன் செயல்பட வேண்டுமென்று ஆலோசிக்கப்பட்டது. மேலும், கால்நடை துறையில் சிறப்பாக செயல்பட்ட கால்நடை உதவி மருத்துவா்களுக்கு கால்நடை உதவி இயக்குநா் ச.தாமோதரன் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.