DC vs RCB: 'ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது, ஆனால் விராட் கோலி..!' - ஆட்டநாயகன் க்ருணால் பாண்டியா
ஐ.பி.எல் தொடரில் நேற்று(ஏப்ரல் 27) நடைபெற்ற போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
க்ருணால் பாண்டியா சிறப்பாக பேட்டிங் ஆடி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றி இருந்தார். அவர் 47 பந்துகளில் 73 ரன்களை எடுத்திருந்தார். அவருக்குதான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

விராட் கோலி ஆதரவாக இருந்தார்
இந்நிலையில் ஆட்டநாயகன் விருதைப் பெற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய க்ருணால் பாண்டியா, “ஆரம்பத்தில் பேட்டிங் ஆட கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஆனால் எனக்கு விராட் கோலி ஆதரவாக இருந்தார். அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும்.
அவருடன் இருந்தால் களத்தில் ரன்கள் சேர்க்க சுலபமாக இருக்கும். ஒரு பந்துவீச்சாளராக, எப்போதும் ஒரு படி முன்னிலையில் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எனது பந்துவீச்சை மேம்படுத்த தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கிறேன்.

அதனால் தான், நீங்கள் என்னிடம் மாற்றங்களைக் காண்கிறீர்கள். பேட்ஸ்மேன்களின் பலத்தைப் புரிந்துக்கொண்டு, அதை எனக்கே சாதகமாக மாற்ற முயற்சி செய்கிறேன். அதேசமயம் என்னுடைய பேட்டிங் திறனும் மேம்பட்டு வருகிறது” என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs