Pahalgam Attack: 'ஒருதலைபட்சமான, சட்டவிரோத நடவடிக்கை' - பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த சீனா
கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.
இந்தத் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருக்கலாம் என்று இந்தியா வலுவாக சந்தேகிக்கிறது. இதனால், இந்தியா அட்டாரி - வாகா எல்லை மூடுதல், சிந்து நீர் ஒப்பந்தம் ரத்து போன்ற நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்து வருகிறது.
அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அண்டை நாடான சீனா இந்தத் தாக்குதல் குறித்து வாயை திறக்கவே இல்லை.

இந்த நிலையில், நேற்று சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, பாகிஸ்தானின் துணை பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது இஷாக் தாரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்.
இதுக்குறித்து பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில், "வாங் யி இந்தியாவின் ஒருதலைபட்சமான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளையும், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா செய்யும் ஆதாரமற்ற பிரசாரத்தையும் எதிர்த்தார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து இந்தியா உடன் நிற்கிறது அமெரிக்கா. சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறது.
இந்தத் தாக்குதலுக்கு தக்க பதில் கொடுத்தே ஆவோம் என்கிற இந்தியாவின் உறுதிப்பாட்டை, சீனாவின் இந்த நிலைபாடு தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Deputy Prime Minister / Foreign Minister, Senator Mohammad Ishaq Dar @MIshaqDar50, today held a telephone conversation with Member of the Political Bureau of the CPC Central Committee and Foreign Minister of China, Wang Yi.
— Ministry of Foreign Affairs - Pakistan (@ForeignOfficePk) April 27, 2025
DPM/FM briefed FM Wang Yi on current regional… pic.twitter.com/rqjJqjyhZP