செய்திகள் :

மும்பை இந்தியன்ஸ் வரலாற்றுச் சாதனை!

post image

லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் லக்னெள அணியை எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் பேட்டிங் செய்து 215 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய லக்னெள அணியை 161 ரன்களில் ஆல்அவுட் செய்து 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடங்கியவுடன் சில போட்டிகளில் தடுமாறிய மும்பை இந்தியன்ஸ் அணி, தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

வரலாற்றுச் சாதனை

ஐபிஎல் வரலாற்றில் 150 வெற்றிகளைப் பதிவு செய்த முதல் அணி என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் இதுவரை 271 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, 148 முறை நேரடியாகவும் இரண்டு முறை சூப்பர் ஓவரிலும் வெற்றி பெற்றுள்ளது.

இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (140) மற்றும் மூன்றாவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (134) உள்ளன. இதில், சென்னை அணிக்கு இரண்டு சீசன்கள் தடை விதிக்கப்பட்டு விளையாடாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் அடித்தால், தோல்வி பெறாத அணி என்ற பெருமையையும் மும்பை இந்தியன்ஸ் தக்கவைத்துள்ளது.

இதுவரை முதலில் பேட்டிங் செய்து 16 முறை 200 ரன்களுக்கு மேல் மும்பை இந்தியன்ஸ் அணி அடித்துள்ளது, அனைத்து போட்டிகளிலும் எதிரணியை வீழ்த்தியுள்ளது.

இதையும் படிக்க : ஜஸ்பிரித் பும்ரா, டிரெண்ட் போல்ட் அசத்தல் பந்துவீச்சு; மும்பை அபார வெற்றி!

ரிஷப் பந்துக்கு ரூ. 24 லட்சம் அபராதம்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைப... மேலும் பார்க்க

விராட் கோலி, க்ருணால் பாண்டியா அசத்தல்: ஆர்சிபிக்கு 7-வது வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட்டின் 46-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது. முதலில் டெல்லி 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு... மேலும் பார்க்க

ஆர்சிபிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தில்ல... மேலும் பார்க்க

ஐபிஎல் போட்டிகளில் 4,000 ரன்களைக் கடந்து சூர்யகுமார் யாதவ் சாதனை!

ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் 4000 ரன்களைக் கடந்துள்ளார்.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜ... மேலும் பார்க்க

ஜஸ்பிரித் பும்ரா, டிரெண்ட் போல்ட் அசத்தல் பந்துவீச்சு; மும்பை அபார வெற்றி!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்று... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்; பிளேயிங் லெவனில் டு பிளெஸ்ஸி!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங... மேலும் பார்க்க