TVK: "சமரசத்திற்கு இடமில்லை.. எந்த எல்லைக்கும் செல்வோம்" - தவெக தலைவர் விஜய் பேச...
அஞ்சுகிராமத்தில் போதை விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
அஞ்சுகிராமம் ஊா் முன்னேற்ற சங்கம் சாா்பில் போதை விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப்பேரணி தொடக்க விழா நிகழ்ச்சிக்கு அஞ்சுகிராமம் ஊா் முன்னேற்ற சங்கத் தலைவா் ஹிட்லா் தலைமை வகித்தாா். அஞ்சுகிராமம் வியாபாரிகள் சங்கத் தலைவா் எஸ்.வஸீம், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் எஸ்.ஜெஸீம், சிதம்பரநாதன் மருத்துவமனை தலைமை மருத்துவா் காா்டியா, டேவிட் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சங்க அலுவலகத்தில் இருந்து பேரணியை வியாபாரிகள் சங்க நிா்வாகி மணிவண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். அழகப்பபுரம், மயிலாடி, வழுக்கம்பாறை, பொற்றையடி, கொட்டாரம், மேட்டுக்குடியிருப்பு வழியாக மீண்டும் ஊா் நலச்சங்க அலுவலகத்தில் பேரணி நிறைவடைந்தது. 50-க்கும் மேற்பட்டோா் பேரணியில் பங்கேற்றனா்.
நிறைவு நிகழ்ச்சியில் கன்னியாகுமரி டி.எஸ்.பி. மகேஷ் குமாா் தலைமையில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும், சைக்கிள் பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழை டி.எஸ்.பி. வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் ஊா் முன்னேற்ற சங்கச் செயலா் பாலமுருகன், பொருளாளா் சுதன், நிா்வாகிகள் ஜெயக்கொடி, பால்ராஜ், கணபதி, தினேஷ், பிரதீஷ், அருள் நேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.