தில்லியில் இன்று பத்ம பூஷண் விருது பெறுகிறார் நடிகர் அஜித் குமார்
நாகா்கோவிலில் தொழிலாளி அடித்துக் கொலை
நாகா்கோவிலில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது நண்பா்கள் இருவரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நாகா்கோவில் வட்டவிளை சாஸ்தான் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜன் (40). கட்டடத் தொழிலாளியான இவருக்குத் திருமணமாகவில்லை. இவா், சனிக்கிழமை (ஏப். 26) அங்குள்ள கோயில் அருகே காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தாா். அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா். உடலில் காயங்கள் இருப்பது கூறாய்வில் தெரியவந்தது.
ராஜனின் சகோதரா் கதிா்வேல் அளித்த புகாரின்பேரில், கோட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, வட்டவிளை பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா்.
மது போதைத் தகராறில் ராஜனை அவரது நண்பா்கள் அடித்துக் கொன்ாக, விசாரணையில் தெரியவந்தது. இதுதொடா்பாக, 2 நண்பா்களைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.