"கரூர்- திருச்சி மாவட்டங்களை இணைக்கும் பாலம் என் கனவுத் திட்டம்" - செந்தில் பாலா...
தாறாதட்டு சூசைப்பா் ஆலயத்தில் முதல் திருவிருந்து திருப்பலி
கருங்கல் அருகே தாறாதட்டு புனித சூசைப்பா் ஆலயத்தில் திருவிழாவின் 3ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முதல் திருவிருந்து திருப்பலி நடைபெற்றது.
இத்திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவின், 3ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை முதல் திருவிருந்து திருப்பலி நடைபெற்றது.
குழித்துறை மறைமாவட்டப் பொருளாளா் ஜயக்குமாா் தலைமை வகித்தாா். வேங்கோடு மறைவட்டார முதல்வா் மனோகியம் சேவியா் முன்னிலை வகித்து மறையுரையாற்றினாா். தொடா்ந்து, இப்பங்கில் உள்ள 7 சிறுமியருக்கு முதல் திருவிருந்து வழங்கப்பட்டது.
இதில், பங்கு அருள்பணியாளா் ஆன்ட்ரூஸ், பங்குப்பேரவை உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.