சென்னை காவல் துறைக்கு 4 மாதங்களில் 69,000 அவசர அழைப்புகள்! மாநகர காவல் துறை
முத்தரப்பு கிரிக்கெட்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய மகளிரணி அபார வெற்றி!
இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிரணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்க மகளிா் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடா் கொழும்பு பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இதன் முதல் ஆட்டத்தில் இந்திய-இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்து இலங்கையை 137 ரன்களுக்கு சுருட்டியது.
இந்தியா சார்பில் ஸ்நேஹ ராணா 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
அடுத்து விளையாடிய இந்திய மகளிரணி 29.4 ஓவர்களில் 149/1 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக பிரதிகா ராவல் 50*, ஸ்மிருதி மந்தனா 43, ஹர்லீன் தியோல் 48* ரன்களும் எடுத்தார்கள்.
பிரதிகா ராவல் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்தியா அடுத்த போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் ஏப்.29ஆம் தேதி எதிர்கொள்கிறது.
ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளில் விளையாடுகின்றன. அதில் டாப் 2 அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். அதில் வெற்றிபெறும் அணியே முத்தரப்பு தொடரில் வென்றதாக அறிவிக்கப்படும்.
For anchoring the chase with an unbeaten 50, Pratika Rawal is the Player of the Match
— BCCI Women (@BCCIWomen) April 27, 2025
Scoreboard ▶️ https://t.co/cf4bWgyFWs#TeamIndia | #WomensTriNationSeries2025 | #SLvINDpic.twitter.com/JwKmPF3sPQ