பஹல்காம் தாக்குதல் ஹிந்து - முஸ்லீம் பிரச்னை அல்ல! - காஜல் அகர்வால்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஜோஸ் ஹேசில்வுட் சிறப்பாக செயல்படுவார்: ரவி சாஸ்திரி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஜோஸ் ஹேசில்வுட் சிறப்பாக செயல்படுவார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற ஜூன் மாதம் இங்கிலாந்திலுள்ள லார்ட்ஸ் திடலில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன.
இதையும் படிக்க: ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, நேபாளம் இடையே முத்தரப்பு டி20 தொடர்!
ரவி சாஸ்திரி கூறுவதென்ன?
இன்னும் இரண்டு மாதங்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஸ்காட் போலாண்டைக் காட்டிலும் ஜோஸ் ஹேசில்வுட் சிறப்பாக செயல்படுவார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கான ஆஸ்திரேலிய அணியில் பிரதான பந்துவீச்சாளர்களாக பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் இருவரும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். அணியில் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளருக்கான ஆலோசனை சென்று கொண்டிருக்கிறது.
Ravi Shastri names his preferred Australia bowling attack for the upcoming World Test Championship Final
— ICC (@ICC) April 25, 2025
More on The #ICCReviewhttps://t.co/I4J2ErizYC
ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் ஆல்ரண்டர் பியூ வெப்ஸ்டர் இடம்பெறும் பட்சத்தில், மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக ஜோஸ் ஹேசில்வுட் அல்லது ஸ்காட் போலாண்ட் இவர்கள் இருவரில் பிளேயிங் லெவனில் யார் சேர்க்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுகிறது.
இதையும் படிக்க: 400-ஆவது டி20 போட்டியில் எம்.எஸ்.தோனி!
இது தொடர்பாக ஐசிசி ரிவ்யூவில் ரவி சாஸ்திரி பேசியதாவது: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஜோஸ் ஹேசில்வுட் அல்லது ஸ்காட் போலாண்ட் இவர்கள் இருவரில் பிளேயிங் லெவனில் யாரைத் தேர்வு செய்வது என்பது மிகவும் கடிமனதாக இருக்கும். ஆனால், ஜோஸ் ஹேசில்வுட் முழு உடல் தகுதியுடன் இருக்கும் பட்சத்தில், அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார். இங்கிலாந்து ஆடுகளங்களின் சூழல் ஜோஸ் ஹேசில்வுட்டின் பந்துவீச்சுக்கு ஏற்றதாக இருக்கும். ஆஸ்திரேலிய அணிக்காக லார்ட்ஸ் திடலில் கிளன் மெக்ராத் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதேபோல, ஜோஸ் ஹேசில்வுட்டும் சிறப்பாக செயல்படுவார் என நினைக்கிறேன் என்றார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லார்ட்ஸ் திடலில் வருகிற ஜூன் 11 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.