பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்த தனுஷ் கோட்டியான்!
மும்பை அணியின் ஆல்ரவுண்டரான தனுஷ் கோட்டியான் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி, 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அதன் அடுத்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
இதையும் படிக்க: முதல் டெஸ்ட் தோல்வி எதிரொலி: 2-வது டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணியில் மாற்றம்!
பஞ்சாப் கிங்ஸ் அணியில் யுஸ்வேந்திர சஹால் பிரதான சுழற்பந்துவீச்சாளராக உள்ளார். ஹர்பிரீத் பிரார் மற்றும் பிரவீன் துபே ஆகியோரும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் சுழற்பந்துவீச்சு தெரிவுகளாக உள்ளனர்.
இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் நெட் பந்துவீச்சாளராக தனுஷ் கோட்டியான் இணைந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வரும் ஆல்ரவுண்டரான தனுஷ் கோட்டியான் ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் சுழற்பந்துவீச்சில் சவாலளிக்கும் விதமாக பந்துவீசுவதால், அவர்களது பந்துவீச்சு அச்சுறுத்தலை எதிர்கொள்ள தனுஷ் கோட்டியான் நெட் பந்துவீச்சாளராக பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார்.
இதையும் படிக்க: சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக பாட் கம்மின்ஸ் பேசியதென்ன?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக கடந்த சீசனில் அந்த அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு, கொல்கத்தா அணியின் பலம் மற்றும் பலவீனம் மிகவும் நன்றாக தெரியும். அதன் காரணமாகவே, வலது கை சுழற்பந்துவீச்சாளரான தனுஷ் கோட்டியான் அணியில் நெட் பந்துவீச்சாளராக இணைந்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸுடன் தனுஷ் கோட்டியான் நெட் பந்துவீச்சாளராக இணைந்துள்ளது அந்த அணிக்கு பலன் அளிக்குமா என்பது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டி நிறைவடைந்தவுடன் தெரிய வரும்.