செய்திகள் :

சேப்பாக்கில் டெவால்ட் ப்ரீவிஸ் களமிறங்குவாரா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

post image

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெவால்ட் ப்ரீவிஸ் களமிறங்குவாரா என்ற கேள்விக்கு சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஃபிளெமிங் பதிலளித்துள்ளார்.

சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர் குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக விலகியதால் அவருக்குப் பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ் சிஎஸ்கே அணியில் ஏப்.18இல் தேர்வானார்.

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ’குட்டி ஏபிடி’ என்றழைக்கப்படும் டெவால்ட் ப்ரீவிஸ் முன்னாள் தெ.ஆ. வீரரைப் போன்று அதிரடியாக 360 டிகிரியிலும் பேட்டிங் செய்கிறார்.

சிஎஸ்கே அணியில் தேர்வானாலும் இதுவரை பிளேயிங் லெவனில் தேர்வாகவில்லை.

சிஎஸ்கே அணியில் மிடில் ஆர்டரில் பிரச்னையாக இருக்கிறது. டெவால்ட் ப்ரீவிஸ் அணியில் களமிறங்கினால் அந்தப் பிரச்னை தீருமென ரசிகர்கள் கருதுகிறார்கள்.

இது குறித்த கேள்விக்கு பயிற்சியாளர் ஃபிளெமிங், “ அவரைப் போல ஒருவரையே ஆப்ஷனாகவே வைத்துள்ளோம். இந்தத் தொடர் முழுவதும் உள்ள வேறு வீரர்களும் இருக்கிறார்கள்.

டெவால்ட் ப்ரீவிஸ் அணிக்கு தேர்வானது கூடுதல் ஆதாயம்தான். ஆனால், யாரைத் தேர்ந்தெடுத்தால் அணி சரியாக இருக்குமென யோசித்து வருகிறோம். இது குறித்து விவாதித்து வருகிறோம்” என்றார்.

புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சிஎஸ்கே இந்தப் போட்டியிலாவது வெல்வார்களா என அதன் ரசிகர்கள் காத்து வருகிறார்கள்.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்த தனுஷ் கோட்டியான்!

மும்பை அணியின் ஆல்ரவுண்டரான தனுஷ் கோட்டியான் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி, 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்ட... மேலும் பார்க்க

பந்துவீச்சில் அசத்திய ஹர்ஷல் படேல்; 154 ரன்களுக்கு ஆட்டமிழந்த சிஎஸ்கே!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங... மேலும் பார்க்க

சிஎஸ்கே பேட்டிங்; பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் ... மேலும் பார்க்க

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக பாட் கம்மின்ஸ் பேசியதென்ன?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு குறித்து அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசியுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. இதுவரை ... மேலும் பார்க்க

400-ஆவது டி20 போட்டியில் எம்.எஸ்.தோனி!

சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி 400-ஆவது டி20 போட்டியில் களமிறங்குகிறார்.இந்த ஐபிஎல் சீசனில் ருதுராஜ் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேற எம்.எஸ்.தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதுவரை 399 டி20 ... மேலும் பார்க்க

ஈ சாலா கப் நம்தே: பி.வி. சிந்து பகிர்ந்த நெகிழ்ச்சியான பதிவு!

இந்திய பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஆர்சிபி வெற்றிக்கு மிகவும் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். இந்தியன் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு ராஜஸ்... மேலும் பார்க்க