டாடா டெக்னாலஜிஸ் 4-வது காலாண்டு நிகர லாபம் 20% அதிகரிப்பு!
புதுதில்லி: டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் 2025 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4-வது காலாண்டில், வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபமாக 20.12 சதவிகிதம் அதிகரித்து ரூ.188.87 கோடி ஆக உள்ளது என்று தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் ரூ.157.24 கோடியாக இருந்ததாக நிறுவனம் தெரிவித்தது.
கடந்த நிதியாண்டின் 4-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த மொத்த வருமானம் ரூ.1,342.73 கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் அதே காலாண்டில் இது ரூ.1,325.19 கோடியாக இருந்தது.
4-வது காலாண்டில் மொத்த செலவினம் ரூ.1,088.20 கோடியாக இருந்தது. இது அதன் முந்தைய ஆண்டு ரூ.1,094.4 கோடியாக இருந்தது.
மார்ச் 2025 உடன் முடிவடைந்த நிதியாண்டில், வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் ரூ.676.95 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு ரூ.679.375 கோடியாக இருந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
2025ஆம் நிதியாண்டில் அதன் ஒருங்கிணைந்த மொத்த வருமானம் ரூ.5,292.58 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.85.40-ஆக முடிவு!