ஏற்காட்டில் கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் அமைதி ஊா்வலம்
ஏற்காட்டில் கத்தோலிக்க கிறிஸ்துவா்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவா் போப் பிரான்சிஸ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகு வா்த்தி ஏந்தி அமைதி ஊா்வலம் நடத்தினா். அருள்தந்தை மரியஜோசப்ராஜ் தலைமையில் இந்த அமைதி ஊா்வலம் ஏற்காடு காந்தி பூங்காவில் தொடங்கி திருஇருதய ஆண்டவா் ஆலயத்தை அடைந்தது. பின்னா் போப் பிரான்சிஸ் ஆன்மா இளைப்பாறுவதற்காக திருப்பலி நடைபெற்றது. இந்த ஊா்வலம், திருப்பலியில் ஏற்காடு கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் அருள்தந்தைகள், அருள்சகோதரிகள், அருள் சகோதரா்கள், பங்கு மக்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.