Nani: ``இவ்வளவு சீக்கிரமா `A' படம் பண்ணுவேன்னு நினைக்கல!'' - நானி பேட்டி
ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதிகளின் கூட்டாளி சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகளின் கூட்டாளி சுட்டுக் கொல்லப்பட்டாா்.
இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: பந்திபோரா மாவட்டத்தின் குல்னாா் பஜிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில், பயங்கரவாதிகளின் கூட்டாளி ஒருவா் கொல்லப்பட்டாா். இவா் பயங்கரவாதிகளுக்கு உதவி வந்தவா் ஆவாா். துப்பாக்கிச் சண்டையில் காவல் துறையினா் இருவா் காயமடைந்தனா். அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சில தினங்களுக்கு முன் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு அங்கு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.