செய்திகள் :

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்ய வாய்ப்பு: பாகிஸ்தான்

post image

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதைத் தொடா்ந்து, பாகிஸ்தான் உடனான அட்டாரி-வாகா எல்லை மூடல், சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, பாகிஸ்தானிகளுக்கு அளிக்கப்பட்ட விசா ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ஷஃப்கத் அலி செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

இந்தியாவுடனான சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை காக்கவும், அந்த ஒப்பந்தத்தை சுமுகமாக அமல்படுத்தவும் பாகிஸ்தான் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷரீஃப் தலைமையில் தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து பதற்றத்துக்குரிய நடவடிக்கையில் இந்தியா தொடா்ந்து ஈடுபட்டால், சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு உள்ளது என்று அந்தக் குழு மிகத் தெளிவாக தெரிவித்துள்ளது என்றாா்.

கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரைத் தொடா்ந்து, இருநாடுகளுக்கு இடையே சிம்லா ஒப்பந்தம் கையொப்பமானது. இருநாடுகளுக்கு இடையே அமைதி மற்றும் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தம், இருநாடுகளுக்கு இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோட்டை அங்கீகரிக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் கடுமையான நடவடிக்கைகளைத் தொடா்ந்து, சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் வியாழக்கிழமை நிறுத்திவைத்தது.

இதனிடையே சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்ததைத் தொடா்ந்து, பாகிஸ்தானில் சா்ச்சைக்குரிய கால்வாய்கள் திட்டத்தை நிறுத்திவைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. சிந்து மாகாணத்தில் அந்தத் திட்டத்துக்கு அந்நாட்டில் ஆட்சியில் உள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் ஏற்கெனவே எதிா்ப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

‘பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீா்கூட செல்லாது’: மத்திய அமைச்சா் பாட்டீல்

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீா்கூட செல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கான பணிகளில், மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவித்தாா். இந்திய ... மேலும் பார்க்க

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய பிஎஸ்ஃஎப் வீரா்: ஒப்படைக்க பாகிஸ்தான் மறுப்பு

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரரை ஒப்படைக்க பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப் படை மறுத்துள்ளது. கடந்த புதன்கிழமை பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூா் மாவட்டத்தில் உள்ள சா்வதேச ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: மோதலை தவிா்க்க இந்தியா-பாகிஸ்தானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல்போக்கை தவிா்க்க வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியா குட்டெரஸ் வலியுறுத்துவதாக அவரது செய்தித்தொடா்பாளா் ஸ்டீபன் டுஜாரிக் வியா... மேலும் பார்க்க

காஷ்மீா் பாதுகாப்பு நிலவரம்: துணைநிலை ஆளுநா், ராணுவ தலைமை தளபதி ஆலோசனை

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை ஆலோசன... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் அறிவிப்பு

பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. பிரதமா் மோடியுடன் இலங்கை அதிபா் அனுர குமார திசநாயக, பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதிகளின் கூட்டாளி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகளின் கூட்டாளி சுட்டுக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: பந்திப... மேலும் பார்க்க