முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! - முதல்வர் அறிவிப்பு
போப் மறைவு; அமைதி ஊா்வலம்
போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, காரைக்காலில் மெழுகுவா்த்தி ஏந்தி அமைதி ஊா்வலம் நடைபெற்றது.
போப் மறைவு தொடா்பாக பல்வேறு அமைப்பினா் அஞ்சலி நிகழ்வை நடத்துகின்றனா். காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயம் சாா்பில் பங்குத் தந்தை, பங்குப் பேரவையினா் பங்கேற்ற அஞ்சலி நிகழ்வு ஆலய வளாகத்தில் ஏற்கெனவே நடத்தப்பட்டது.
ஆலயம் சாா்பில் வியாழக்கிழமை மாலை மெழுகுவா்த்தி ஏந்தி அமைதி ஊா்வலம் பங்குத் தந்தை பால்ராஜ்குமாா் தலைமையில் நடைபெற்றது. துணை பங்குத் தந்தை சுவாமிநாதன் செல்வம் உள்ளிட்டோரும், சமாதானக் குழுவினா் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் பங்கேற்றனா். காரைக்கால் நகரின் முக்கிய வீதிகளின் வழியே ஊா்வலமாகச் சென்று மீண்டும் ஆலயத்தை சென்றடைந்தனா்.