செய்திகள் :

உத்தரகண்டில் ராணுவ சீருடை விற்பனைக்குத் தடை!

post image

உத்தரகண்ட் மாநிலத்தில் இந்திய ராணுவத்தின் சீருடைகளை விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தினரின் சீருடை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், உத்தரகண்டில் பாதுகாப்பு காரணங்களினால் அங்குள்ள சந்தைகளில் இந்திய ராணுவத்தினரின் சீருடைகள் விற்கத் தற்காலிகமாக அம்மாநில காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.

இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ராணுவம், துணை ராணுவம் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்புப் படையினரின் சீருடைகளை விற்கும் கடைகள் அடையாளம் காணப்பட்டு அதன் விற்பனைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், காவல் துறையினரின் உத்தரவுக்கு முன்னரே தாங்கள் உரிய ஆவணங்களின்றி யாருக்கும் சீருடைகள் விற்பனை செய்வதில்லை என அம்மாநிலத்தில் கடை நடத்தி வரும் சீருடை விற்பனையாளர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 'சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்களின் ரத்தம் ஓடும்' - பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர்!

கேரள தலைநகரிலுள்ள விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலுள்ள பல்வேறு விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்திலுள்ள பிரபல நட்சத்திர விடுதி உள்பட பல்வேறு விடுதிகளில் ஐ.ஈ.டி. எனப்படும் ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நடுநிலை விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது, பழிபோடும் விளையாட்டுக்கு பஹல்காம் தாக்கு... மேலும் பார்க்க

சிந்து நதிநீரை நிறுத்திவிடுவீர்கள்.. ஆனால் எங்கே தேக்கிவைப்பீர்கள்? அசாதுதீன் ஒவைசி கேள்வி

புது தில்லி: பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதிநீரை நிறுத்திவிடுவது நல்ல முடிவுதான், ஆனால், அந்த தண்ணீரை எங்கே தேக்கிவைப்பீர்கள் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி அசாதுதீன் ஒவ... மேலும் பார்க்க

காஷ்மீரில் குண்டுவெடிப்பில் தகர்க்கப்பட்ட பயங்கரவாதிகளின் வீடுகள்: விடியோ வெளியீடு!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் இருவரின் வீடுகளில் பாதுகாப்புப் படையினா் சோதனை மேற்கொண்டபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வ... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்: நட்டா

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார். இன்று காலை நட்டா ஸ்ரீமந்த் தகாதுஷேத் கணபதிக்க... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளைப் போராளிகள் எனக் குறிப்பிட்ட அமெரிக்க ஊடகம்

நியூயார்க் டைம்ஸ் செய்தி ஊடகத்தில் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை போராளிகள் என்று குறிப்பிட்டிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய்க... மேலும் பார்க்க