பஹல்காம் தாக்குதல்: நேபாளத்தில் பாகிஸ்தான் தூதரகம் முன்பு போராட்டம்!
பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து நேபாளத்திலுள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்தத் தாக்குதலைக் கண்டித்து நேபாள தலைநகர் காத்மாண்டிலுள்ள பாகிஸ்தானின் தூதரகம் முன்பு நாகாரிக் யுவா சக்தி நேபாள் எனும் அமைப்பைச் சேர்ந்த பலர் இன்று (ஏப்.26) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் தாக்குதலில் பலியான நேபாளத்தைச் சேர்ந்த சுதீப் நியூபானே (வயது 27) என்பவரின் புகைப்படம் மற்றும் பதாகைகளைக் கையில் ஏந்தியதுடன், 'பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும்’, ’ஹிந்துக்களைக் கொல்வதை நிறுத்துங்கள்’ ஆகிய முழக்கங்களை போராட்டக்காரர்கள் எழுப்பியுள்ளனர்.
இத்துடன், அந்நாட்டைச் சேர்ந்த ராஷ்டிரிய பிரஜதந்த்ரா கட்சி சார்பில் இன்று (ஏப்.26) பாகிஸ்தான் தூதரகம் முன்பு மற்றொரு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு: 2 லட்சம் பேர் பங்கேற்பு