ஒரே ஒரு மரப்பெட்டி ஏன்? போப்பின் சவப்பெட்டியில் என்னென்ன வைக்கப்படும்?
கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸுக்கான இறுதிச் சடங்கு இன்று மதியம் 1.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்னதாக பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸின் உடல் சனிக்கிழமை இறுதிச் சடங்கு முடிந்ததும் அவரது விருப்பத்தின்படி புனித மேரி தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
266-ஆவது போப் ஆண்டவரான போப் பிரான்சிஸ் (88), உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானாா்.
போப் பிரான்சிஸ் உடல்நலம் குறைந்து சிகிச்சைபெற்று வந்தபோதே, தனக்கு மிக எளிமையான முறையில் இறுதிச் சடங்குகள் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அவரது விருப்பப்படி, அவரது உடல் ஒரே ஒரு மரத்தால் ஆன சவப்பெட்டியில் வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.
வழக்கமாக,
பாரம்பரிய முறைப்படி, மூன்று வகையான சவப்பெட்டிகள் ஒன்றுக்குள் ஒன்று வைத்து நல்லடக்கம் செய்வது வழக்கம். அதாவது, ஊசி இலை மரத்தால் செய்யப்பட்ட சவப்பெட்டி, எஃகு சவப்பெட்டி, ஓக் மரத்தால் ஆன பெட்டிகள் என மூன்று பெட்டிகளுக்குள் ஒன்றன் உள் ஒன்று வைத்து நல்லடக்கம் செய்யப்படுவது வழக்கமாம்.
கைதட்டும் மக்கள்
போப் பிரான்சிஸ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தவரை, அப்பகுதியே இருண்ட அமைதியில் காத்திருந்த நிலையில், புனித பீட்டர் சதுக்கத்தில் இருந்த கூட்டம், போப்பாண்டவரின் சவப்பெட்டி ஊர்வலமாக வெளியே கொண்டு வரப்பட்டபோது கைதட்டத் தொடங்கினார்கள். இதுவும் அவர்களது பாரம்பரிய வழக்கம்.