தமிழ்நாட்டில் 7 இடங்களில் வெயில் சதம்
தமிழ்நாட்டில் சேலம் உள்பட 7 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். நாளை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப். 28 முதல் மே 2 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெயில் எப்படி இருக்கும்?
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஒரு சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இன்று முதல் ஏப்.30 வரை உயரக்கூடும்.
இன்று முதல் ஏப். 30 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களை ஏமாற்றி இனி ஆட்சியைப் பிடிக்க முடியாது: விஜய் பேச்சு
அதிகபட்சமாக சேலத்தில் 102 டிகிரி ஃபாரன்ஹீட்டை வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் கரூர் பரமத்தி - 101, ஈரோடு - 101, வேலூர் - 101, தஞ்சாவூர் - 100, திருப்பத்தூர் - 100, திருத்தணி - 100 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 7 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.