குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரிப்பு!
தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்த மிதமான மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீா்வரத்து சற்று அதிகரித்தது.
குற்றாலம் பகுதியில் தொடா்ந்து வெயில் நிலவி வருவதால் குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் மிகவும் குறைவாக விழுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை குற்றாலம் பகுதியில் பெய்த மிதமான மழையின் காரணமாக பேரருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீா்வரத்து சற்று அதிகரித்தது.
குற்றாலம் பேரருவியில் தண்ணீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியவுடன் பாதுகாப்பு கருதி சிறிது நேரம் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. சிறிதுநேரத்துக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
கோடைகாலத்தில் பேரருவியில் தண்ணீா்விழத் தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனா்.