செய்திகள் :

Tourist Family: `அக் 31-ம் தேதி என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?' - மேடையில் காதலை தெரிவித்த இயக்குநர்

post image

இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடித்திருக்கும் படம் `டூரிஸ்ட் ஃபேமிலி' இந்தப் படத்தில் புரோமோஷன் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது.

சென்னையில் இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தன் தோழியிடம் காதலை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ வைரலாகிவருகிறது.

அந்த வீடியோவில், ``இந்த நிகழ்ச்சியில் முக்கியமான ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அகிலா இளங்கோவன்.. சொல்ல வேண்டும் என்பதை விட அவரிடம் ஒன்று கேட்க வேண்டும். ஆறாம் வகுப்பிலிருந்து உன்னை எனக்குத் தெரியும். 10-ம் வகுப்பிலிருந்து நாம் நெருங்கிய நண்பர்களாக பழகிவருகிறோம். என்னை அக்டோபர் 31-ம் தேதி திருமணம் செய்துகொள்கிறாயா? I Love You so much.

நிறையமுறை நான் பலகீனமாக இருக்கும்போது அவர்தான் என்னுடன் இருந்தார். நான் இந்த நிலையில் இருப்பதற்கு என் அம்மா எவ்வளவு முக்கியமோ அதே அளவு இவரும் என்னுடன் இருந்திருக்கிறார்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Pahalgam Attack: ``பாகிஸ்தானியர்களும் நம்மைப் போல அமைதியை விரும்புகிறார்கள்'' - நடிகர் விஜய் ஆண்டனி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தீவிரவாத தாக்குதலுக்கு இந்... மேலும் பார்க்க

`பாட்ஷா பார்த்துட்டு ரஜினி போலவே ஆட்டோ ஓட்டினேன்!' - டூப் ஆர்டிஸ்ட் ரஜினி சோமுவின் கதை! |Human Story

"வணக்கம் பிரதர். எப்படி இருக்கீங்க" என வாஞ்சையோடு வரவேற்றுப் பேசத் தொடங்கினார் ரஜினி சோமு. திண்டுக்கல்லைச் சேர்ந்த டூப் கலைஞரான சோமு பல ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தைப் போல் வேடமிட்டு மேடைகளில் ந... மேலும் பார்க்க

``சில நடிகர்கள் முகமூடி அணிந்து நல்ல பேரு வாங்குறாங்க; கடந்த 5 வருஷத்துல..'' - மாளவிகா மோகனன்

'Pattam Pole' என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன்.தமிழில் பேட்ட, மாஸ்டர், தங்கலான் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர்.தற்போது ‘சர்தார் 2’ படத்தில் ... மேலும் பார்க்க

``அவருடன் சண்டையிட எனக்குத் தகுதி கிடையாது'' - மகள் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

இந்திய சினிமாவின் முதன்மை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளுடன் பதிவிட்ட புகைப்படம் சர்ச்சையை கிளப்பியது. அதில், கத்திஜா ரஹ்மான் புர்கா அணிந்திருந்ததால், ரஹ்மான் அவரை புர்க... மேலும் பார்க்க

Sumo Review: இது சீரியஸ் படமா, ஸ்பூஃப் படமா? ஜப்பான் வீரரும் சோதிக்கும் காமெடி கலவரமும்!

சென்னை கோவளத்தில் உணவகம் நடத்தும் ஜாக் (விடிவி கணேஷ்), செக்போஸ்டில் போலீஸ்காரரிடம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் சிக்கிக் கொள்கிறார். அவரது காரில் ஒரு பெட்டி இருக்கிறது. அதைத் திறக்க அனுமதி... மேலும் பார்க்க

Retro நாயகிகள் 01 : வான்டடாக பஸ்ஸை தவற விட்ட சிறுமி, பின்னாளில்... `அழகிய தமிழ் மகள்’ மஞ்சுளா

தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல அழகிலும் நடிப்பிலும் ஜொலித்த நாயகிகள் எப்படி சினிமாத்துறைக்கு வந்தாங்க; என்னென்ன சாதிச்சாங்க; அவ... மேலும் பார்க்க