செய்திகள் :

கல்யாணத்தில் ஒலித்த பாடல்; திருமணத்தை நிறுத்திய மணமகன் - பின்னணி இதுதான்

post image

இந்தியாவில் திருமண சீசன் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் பல இதயங்கள் இணையும் விழாக்கள் நடந்துகொண்டிருக்க, பல வித்தியாசமான சம்பவங்களும் அரங்கேறுகின்றன.

டெல்லியில் நடந்த திருமண நிகழ்வில் எதிர்பாராத திருப்பமாக விழா மேடையிலேயே திருமணத்தைத் நிறுத்தியுள்ளார் மணமகன்.

ஜோடி படத்தில் ஒரு `பொய்யாவது சொல் கண்ணே' பாடலைக் கேட்டு சிம்ரன் மனம் மாறியது போல, திருமணத்தில் டிஜே சன்னா மேரேயா என்ற எமோஷனலான பாடலைப் போட்டதால், தன் முன்னாள் காதலன் நினைவு வந்து அவர் திருமணத்தில் இருந்து பாதியிலேயே சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த விசித்திரமான நிகழ்வு பற்றிய பதிவுகள் இன்ஸ்டாகிராமில் வைரலானதால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சிலர் இந்த பாடல் மணமக்களின் வாழ்க்கையைக் காப்பாற்றியுள்ளது எனக் கூற, பலர் இந்த பாடல் எல்லா இந்திய திருமணங்களிலும் போடப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இந்த திருமணம் மற்றும் மணமக்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகவில்லை.

Channa Mereya

சன்னா மேரேயா பாடல் 'ஏ தில் ஹை முஷ்கில்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்றது. ரன்பீர் கபூர் மற்றும் அனுஷ்கா சர்மா நடித்த அந்த திரைப்படம் பாலிவுட்டில் மிகப் வெற்றியைப் பெற்றது.

அர்ஜீத் சிங் பாடிய இந்த பாடல் மொழிகளைத் தாண்டி அனைவராலும் ரசிக்கப்படுகிறது. முக்கியமாக வட இந்தியாவில் காதலர்களின் கீதமாக திகழ்ந்து வருகிறது.

மகாராஷ்டிரா: குறுகிய கால விசாவில் இருக்கும் 1000 பாகிஸ்தானியர்கள் வெளியேற பட்னாவிஸ் உத்தரவு

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதலில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பு ஈடுபட்டு இருப்பத... மேலும் பார்க்க

``உயிரோடு இருக்கும் போதே எனக்கும், மனைவிக்கும் கட்டிய கல்லறை.." -ஓய்வு பெற்ற அரசு பொறியாளர் உருக்கம்

கர்நாடகாவில் ஓய்வு பெற்ற அரசு பொறியாளர் ஒருவர் தான் உயிரோடு இருக்கும்போதே தனக்கும், தனது மனைவிக்கும் கல்லறை கட்டியுள்ளார்.கர்நாடகா மாநிலத்தில் மைசூரு அருகில் இருக்கும் வலகெரே என்ற கிராமத்தைச் சேர்ந்தவ... மேலும் பார்க்க

Pahalgam Attack: "எங்கள் வீடியோவை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்" - Viral Video தம்பதி சொல்வது என்ன?

ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதல் இந்தியாவையே கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. அங்கு நடந்ததாகக் கூறப்படும் ஒவ்வொரு சம்பவமும் பல்வேறு வகையில் மக்களிடம் பகிரப்படுகிறது.குறிப்பாக சுவிட்சர்லாந்து விசா மறுக்கப்... மேலும் பார்க்க

`டூரை முடித்துவிட்டு தான் வருவோம்’ - காஷ்மீரில் சுற்றுலாவை தொடரும் பயணிகள் - என்ன சொல்கிறார்கள்?

காஷ்மீரில் நேற்று முன் தினம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இத்தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக தங... மேலும் பார்க்க

Pahalgam: ``3 வயதில் குழந்தை என்று கெஞ்சினார்.. விடாமல் சுட்டுக் கொன்றனர்'' - மனைவி கண்ணீர் பேட்டி

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நேற்று முன் தினம் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமாக தாக்குதலில் தீவிரவாதிகள் பெண்களை விட்டுவிட்டு அவர்களுடன் வந்த ஆண்களை மட்டும் குறி வைத்து சுட்டுக்கொலை செய்தனர். நாடு ம... மேலும் பார்க்க

Mayonnaise: `மையோனைஸ்'க்கு தமிழக அரசு தடை! அந்தளவுக்குக் கெடுதலா அது? டயட்டீஷியன் விளக்கம்!

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மையோனைஸ் விருப்பமான உணவாகி விட்டது. க்ரில் சிக்கனையும், தந்தூரி சிக்கனையும் மையோனைஸில் தொட்டு ருசித்துக் கொண்டிருந்தவர்கள், தற்போது காய்கறித்துண்டுகள் வைக்கப்பட்... மேலும் பார்க்க