சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு: 700 காளைகள், 400 வீரர்கள் பங்கேற்பு
Pahalgam Attack: "எங்கள் வீடியோவை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்" - Viral Video தம்பதி சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதல் இந்தியாவையே கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. அங்கு நடந்ததாகக் கூறப்படும் ஒவ்வொரு சம்பவமும் பல்வேறு வகையில் மக்களிடம் பகிரப்படுகிறது.
குறிப்பாக சுவிட்சர்லாந்து விசா மறுக்கப்பட்டதால் காஷ்மீருக்குச் சென்ற இந்திய விமானப்படை அதிகாரி கொலை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அதே நேரம் இந்த சம்பவத்துக்குப் பின்னணியில் பல சர்ச்சைக்குரிய, பொய்த் தகவல்கள் பிசாரார நோக்கில் வேகமாகப் பகிரப்படுகிறது.
அதில் ஒன்று காஷ்மீரில் விமானப் படை அதிகாரி வினய் நர்வால் மற்றும் அவரது மனைவி ஹிமான்ஷி சோவாமி நடனமாடுவதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டது.
'பஹல்காம் பயணத்தின்போது லெப்டினன்ட் நர்வால் மற்றும் அவரது மனைவியின் கடைசி வீடியோ இது' என உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகளுடன் ஒரு சமூகத்துக்கு எதிரான கருத்துக்களை அதில் சேர்த்து பகிரப்படுகிறது.
இந்த நிலையில், அந்த வீடியோவில் இருப்பது நாங்கள்தான் என ஆஷிஷ் செஹ்ராவத் - யாஷிகா சர்மா என்ற தம்பதி வீடியோ வெளியிட்டிருக்கின்றனர்.
அதில், ``அந்த வீடியோ ஏப்ரல் 14 அன்று காஷ்மீரிருக்குச் சுற்றுலா சென்றபோது பதிவு செய்யப்பட்டது. தாக்குதல் நடந்தது பற்றி அறிவதற்கு முன்பு அதே நாளில், நாங்கள் சமூக ஊடகங்களில் அந்த வீடியோவைப் பகிர்ந்து கொண்டோம்.
ஆனால், அதற்கான சில எதிர்வினைகளைப் பெறத் தொடங்கினோம். எனவே நாங்கள் அந்த வீடியோவையே அகற்றினோம்.

ஆனால் அதற்குள், யாரோ ஒருவர் வினய் நர்வால் மற்றும் அவரது மனைவி எனக் குறிப்பிட்டு தவறான தகவல்களுடன் அதைப் பரப்பத் தொடங்கிவிட்டனர். நாங்கள் உயிருடன் இருக்கிறோம்.
எங்கள் வீடியோ எப்படி இப்படிப் பரவுகிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இது ஒரு துயர சம்பவத்துடன் தவறாக இணைக்கப்பட்டுள்ளது மனவேதனை அளிக்கிறது.
லெப்டினன்ட் நர்வாலின் குடும்பத்தினருக்கு எங்கள் இரங்கல்கள். எங்கள் வீடியோவைத் தவறாகப் பயன்படுத்தும் எந்தவொரு இடுகையையும் ரிப்போர்ட் செய்யுங்கள்.
எங்களுக்கு இது தவறான வகையில் பயன்படுத்தப்படுவது பயமாக இருந்தது. ஆனால் அதை விடக் கொடுமையான விஷயம் தாங்கள் நேசித்த ஒருவரை இழந்த குடும்பத்திற்கு, ஒரு அந்நியரின் வீடியோ அவர்களின் கடைசி வீடியோ எனப் பரப்பப்படும்போது பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும்" எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88