சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக பாட் கம்மின்ஸ் பேசியதென்ன?
`முன்னாள் காதலியின் நினைவு வந்தது’ - DJவின் ஒரு பாடலால் திருமணத்தை நிறுத்திய மணமகன் - என்ன நடந்தது?
திருமணத்தில் ஒலிக்கப்பட்ட பாடலால், முன்னாள் காதலின் நினைவு வந்து மணமகன் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
இன்றைக்கு நடைபெறும் திருமணங்களில், அந்த நாளை மறக்க முடியாததாக மாற்ற குடும்பத்தினர் பல விஷயங்கள் செய்கின்றனர். நடனம் முதல் இசை, உணவு, அலங்காரம் என திருமணத்தில் பல திட்டமிடல்கள் உள்ளன.
ஆனால் இப்படி பார்த்து நடத்தும் திருமண விழாவில் எதிர்பாராத சில விஷயங்களும் நடந்து விடுகின்றன. அந்த வகையில், டிஜேவின் ஒரு பாடலால் ஒரு திருமண கொண்டாட்டமே தலைகீழாக மாறி உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் டிஜே, ரன்வீர் கபூரின் ”சன்னா மெரேயா” பாடலை ப்ளே செய்துள்ளார். இந்த உணர்ச்சிபூர்வமான பாடலைக் கேட்ட மணமகனுக்கு அவரின் முன்னாள் காதலியின் நினைவுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த திருமணத்தையே நிறுத்தி உள்ளார் மணமகன்.
சமூக ஊடகங்களில் வைரலான ஒரு பதிவின்படி, டெல்லியில் நடந்த ஒரு திருமணத்தின் போது DJ 'சன்னா மெரேயா' பாடலை பிளே செய்தார். இந்தப் பாடலைக் கேட்டதும், மணமகன் உணர்ச்சிவசப்பட்டு, தனது முன்னாள் காதலைப் பற்றி யோசித்தார். இதனால் அவர் திருமணத்தை நிறுத்திவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார். 'சன்னா மெரேயா' என்பது பாலிவுட் படமான 'ஏ தில் ஹை முஷ்கில்' படத்தின் பாடலாகும்.
இந்த பதிவு இணையத்தில் வைரலானதையடுத்து பலரும் இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.