செய்திகள் :

இன்ஸ்டாவில் அசத்தும் ஏஐ கலைஞர் ஜெய் பிரபாகரன்!

post image

ஏஐ ஓவியக் கலைஞர் ஜெய் பிரபாகரனின் உருவாக்கங்கள் பலரையும் கவர்ந்து வருகிறது.

சமூக வலைதளங்கள் பல திறமையாளர்களை உருவாக்குவதுடன் கலை ஆர்வம் கொண்டவர்களுக்கும் அடையாளத்தைப் பெற்றுக்கொடுக்கிறது. நவீன தொழில்நுட்பங்கள் உருவாக உருவாக, அதை தங்களின் திறன்களுக்கான கருவியாக மாற்றிக்கொள்பவர்கள் ஏராளமானவர்கள் உண்டு. அப்படி, ஏஐ தொழில்நுட்பத்தை ஜெய் பிரபாகரன் என்பவர் அபாரமான விதத்தில் பயன்படுத்தி வருகிறார்.

போலி முகங்களை உருவாக்குவது, கற்பனைத் திறனில் போலித்தனத்தைப் புகுத்துவது என இன்று பலரும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயனற்ற முறையில் உபயோகப்படுத்தும்போது ஜெய் பிரபாகரன் உலகளவிலுள்ள பலரையும் ஈர்க்கும் விதமாக அழகான வாழ்க்கை முறை, பண்டைய கால இந்திய மக்களின் வாழ்வியல், நூற்றாண்டுகளுக்கு முந்தைய இடங்கள் என தன் கற்பனையில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அர்த்தமுள்ள காணொலிகளாக மாற்றுவதுடன் அதை ரசிக்கவும் வைக்கிறார்.

இவர் உருவாக்கிய தேநீர் தயாரிப்பு விடியோக்கள், கடலுக்கு அடியிலுள்ள துவாரகா என பல காணொலிகள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.

லண்டனில் வசிக்கும் இந்தக் கலைஞரை இன்ஸ்டாவில் 15 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். எந்த விடியோவை இவர் வெளியிட்டாலும் அவை பல ஆயிரத்திற்கு மேற்பட்ட பகிர்வையும் பெறுவது இந்தத் துறையைச் சார்ந்த பிற கலைஞர்களுக்கும் நம்பிக்கையை அளித்து வருகிறது.

பல கோடி செலவில் ஏஐ என்கிற பெயரில் நம்பகத்தன்மையற்ற காட்சிகளை, கதாபாத்திரங்களை உருவாக்குபவர்கள் ஜெய் பிரபாகரன் போன்றவர்களைத் திரைத்துறையில் பயன்படுத்தலாம் என்பதே பலரின் விருப்பமாகவும் இருக்கிறது.

இதையும் படிக்க: இதுதான் மோகன்லால் படம்! துடரும் படத்தைப் பாராட்டும் ரசிகர்கள்!

இந்தியாவில் முன்கூட்டியே வெளியாகும் மிஷன் இம்பாஸிபிள்!

மிஷன் இம்பாஸிபில் தி ஃபைனல் ரெக்கனிங் திரைப்படம் இந்தியாவில் முன்கூட்டியே வெளியாகின்றது.பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் அதிரடி ஸ்டண்டுகளுக்கு புகழ்பெற்ற மிஷன் இம்பாஸிபில் திரைப்படங்களின் 8வது பாகம... மேலும் பார்க்க

காஞ்சி சங்கர மடத்தின் புதிய பீடாதிபதியாக கணேச சர்மா தேர்வு!

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதியாக ஆந்திரத்தைச் சேர்ந்த ஸ்ரீ கணேச சர்மாவுக்கு வரும் ஏப்.30 ஆம் தேதி காஞ்சி சங்காராசாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீட்சை வழங்கி வழங்கவுள்ளார். காஞ்... மேலும் பார்க்க

மறுவெளியீட்டில் ரூ.10 கோடியைக் கடந்த சச்சின்!

விஜய்யின் சச்சின் திரைப்படம் மறுவெளியீட்டில் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. நடிகர் விஜய் நடித்த சச்சின் திரைப்படம் கடந்த ஏப்.18ஆம் தேதி மறுவெளியீடானது.நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் ஜான் ம... மேலும் பார்க்க

இதுதான் மோகன்லால் படம்! துடரும் படத்தைப் பாராட்டும் ரசிகர்கள்!

நடிகர் மோகன்லாலின் துடரும் படத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். அண்மையில், இவர் நடிப்பில் வெளியான எம்புரான்திரைப்படம் ரூ. 250 கோடிக்கும்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு முன்பே பாக். வீரருக்கு அழைப்பு விடுத்தேன்: நீரஜ் சோப்ரா

பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமை இந்தியாவில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்ததுக்கு நீரஜ் சோப்ரா மீது பரவும் வெறுப்புக்கு பதிலளித்துள்ளார். ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா பெங்களூ... மேலும் பார்க்க

எந்த ஓடிடியிலும் வெளியாகாத மத கஜ ராஜா! என்ன காரணம்?

மத கஜ ராஜா திரைப்படம் இன்னும் எந்த ஓடிடி தளத்திலும் வெளியாகவில்லை. இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மத கஜ ராஜா’ திரைப்படம் கடந்த 2013... மேலும் பார்க்க