ஐசிசி தொடர்களில் இந்தியா - பாகிஸ்தானை ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம்! - பிசிசிஐ
இதுதான் மோகன்லால் படம்! துடரும் படத்தைப் பாராட்டும் ரசிகர்கள்!
நடிகர் மோகன்லாலின் துடரும் படத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். அண்மையில், இவர் நடிப்பில் வெளியான எம்புரான் திரைப்படம் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
இதற்கிடையே, ’சவுதி வெள்ளக்கா' பட இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால் - ஷோபனா இருவரும் இணைந்து நடித்த 56-வது படமான ’துடரும்’ படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்தது.
ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்த இப்படத்தின் முதல் பாடலான “கண்மணி பூவே” ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
கார் ஓட்டுநரான மோகன்லால் தன் மனைவி குழந்தைகளுடன் எளிமையாக வாழ்ந்து வருகிறார். இந்தச் சூழலில் நாயகன் எதிர்கொள்ளும் பிரச்னையும் அதன் தீர்வுகளுமாக இப்படம் உருவாகியுள்ளது.
#Thudarum review
— Vishnu Madappally (@vishnuuukr) April 25, 2025
Malayalathinte #Mohanlalpic.twitter.com/YPn7Efwj2q
பெரிய புரமோஷன்கள் இல்லாமல் இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. ஆனால், ஆச்சரியப்படுத்தும் விதமாக படத்தைப் பார்த்த ரசிகர்கள், திரிஷ்யம் மாதிரி இருக்கிறது என்றும் இதுதான் மோகன்லால் நடிக்க வேண்டிய திரைப்படம் என சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிக்க: எந்த ஓடிடியிலும் வெளியாகாத மத கஜ ராஜா! என்ன காரணம்?