Pahalgam Attack: ``காஷ்மீரில் எனக்கு 2 அண்ணன்கள் உள்ளனர்.." - தந்தையை இழந்த பெண்...
பாட்னா நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
பிகார் மாநிலம் பாட்னா மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மாநில தலைநகர் பாட்னாவிலுள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று (ஏப்.25) அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைப்பட்டு அந்த நீதிமன்ற வளாகம் முழுவது தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அந்தச் சோதனையின் முடிவில், நீதிமன்ற வளாகத்தில் எந்தவொரு சந்தேகப்படும்படியான பொருளும் கிடைக்காததினால், இந்த மிரட்டல் போலியானது என உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து, காவல் துறை உயர் அதிகாரி தீக்ஷா கூறுகையில், பாட்னா சிவில் நீதிமன்றத்தினுள் நீதிபதியின் இருக்கைக்கு மிக அருகில் ஆர்.டி.எக்ஸ். எனும் வெடிகுண்டு நிறுவப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலமாக மர்ம நபர் மிரட்டல் போலியானது என கண்டறியப்பட்டு, அந்த மர்ம நபரைப் பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: அட்டாரி - வாகா எல்லை மூடல்: இரு நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் உறவுகள்!