செய்திகள் :

சென்னை விமான நிலையத்தில் இருந்து மாநகர பேருந்து சேவை தொடக்கம்!

post image

கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளின் வசதிக்காக ஆதம்பாக்கத்திலிருந்து கிளாம்பாக்கம் கலைஞர் நுற்றாண்டு பேருந்து முனையம், தாம்பரத்திலிருந்து தெற்கு மலையம்பாக்கம் மற்றும் அனகாபுத்தூரிலிருந்து பிராட்வேக்கு பேருந்து இயக்கத்தினை இன்று, மீனம்பாக்கத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அமைச்சர் தா.மோ.அன்பரசன், கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

• தடம் எண்: 66எம்

தாம்பரத்திலிருந்து தெற்கு மலையம்பாக்கம் வரை 1 மகளிர் விடியல் பயண பேருந்து (வழி- பல்லாவரம், அனகாபுத்தூர், குன்றத்தூர், கொல்லச்சேரி, 400 அடி சாலை, மலையம்பாக்கம்) இயக்கப்படுகிறது.

• தடம் எண்: 18எஸ்

ஆதம்பாக்கம் NGO காலனி பேருந்து நிலையத்திலிருந்து - கிளாம்பாக்கம் வரை 2 மகளிர் விடியல் பயண பேருந்துகள் (வழி- கக்கன் பாலம், பிருந்தாவன் நகர், வானுவம்பேட்டை, தில்லை கங்கா நகர், மீனம்பாக்கம், தாம்பரம்) இயக்கப்படுகிறது.

• தடம் எண்: 60

அனகாபுத்தூரிலிருந்து பிராட்வே வரை 1 மகளிர் விடியல் பயண பேருந்து (வழி- பல்லாவரம், மீனம்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம் தேனாம்பேட்டை) இயக்கப்படுகிறது.

சிக்கிம் நிலச்சரிவு: 1000 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு!

இந்நிகழ்வின் போது, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர். பிரபுசங்கர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் எஸ்.அருண்ராஜ், பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.கருணாநிதி, மாநகர் போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

பஹல்காம் தாக்குதல்: நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்

பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில், 26 சுற்றுலாப் ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் 10 இடங்களில் வெயில் சதம்

தமிழ்நாட்டில் வேலூர் உள்பட 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த ஏழு நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:தென்னிந்... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் உடலுக்கு அமைச்சர் நாசர் அஞ்சலி

மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் நாசர், திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ. இனிகோ எஸ்.இருதயராஜ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி வழக்கு: இருவரைக் காவலில் வைக்க உத்தவு

செந்தில் பாலாஜி வழக்கில் ஜாமீன் உத்தரவாதம் செலுத்தாத இருவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் முன்பு இன்... மேலும் பார்க்க

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணி ராஜன் மாற்றம்!

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த தேரணி ராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநராக இருந்த டாக்டர் கே சாந்தாராம், சென்னை மருத்துவக் ... மேலும் பார்க்க

சொந்த மாநில அரசு மீதே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஆளுநர் கூறலாமா? வழக்குரைஞர் வில்சன்

தமிழக ஆளுநர், சொந்த மாநில அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எவ்வாறு முன்வைக்க முடியும்? என்று தமிழக அரசு வழக்குரைஞர் வில்சன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையி... மேலும் பார்க்க