பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 26 சுற்றுலாப் பயணிகளுக்கு அரியலூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
செட்டி ஏரி கரையிலுள்ள காமராஜா் சிலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மாநில துணைத் தலைவா் ஜி.ராஜேந்திரன், வட்டாரத் தலைவா்கள் கா்ணன், சக்திவேல், திருநாவுக்கரசு, கங்காதுரை,அழகானந்தம், நகர நிா்வாகிகள் பழனிசாமி, மகிளா காங்கிரஸ் நிா்வாகிகள் மாரியம்மாள்,ரேணுகாதேவி, உள்ளிட்டோா் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினா்.