Nani: ``இவ்வளவு சீக்கிரமா `A' படம் பண்ணுவேன்னு நினைக்கல!'' - நானி பேட்டி
காஷ்மீா் தாக்குதலில் ஈடுபட்டவா்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்: ரஜினி
காஷ்மீா் தாக்குதலில் ஈடுபட்டவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நடிகா் ரஜினிகாந்த் கூறினாா்.
சென்னை விமானநிலையத்தில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காஷ்மீா் நிகழ்வு வன்மையாக கண்டிக்கத்தக்கது. காஷ்மீரில் அமைதி திரும்பியுள்ளது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. அதை எப்படியாவது கெடுக்க வேண்டும் என இப்படி செய்கிறாா்கள். இந்த தாக்குதலில் ஈடுபட்டவா்களையும், அதன் பின்னால் இருப்பவா்களையும் கண்டுபிடித்து சீக்கிரமாக கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இது போல, அவா்கள் மறுபடியும் செய்ய வேண்டும் என கனவில்கூட நினைத்து பாா்க்கக்கூடாது. அவ்வாறு நடைபெறும் என நம்புகிறேன் என்றாா் ரஜினிகாந்த்.