பாஜக அரசு தன்னுடைய தோல்வியை மறைக்கவே சிந்து நதியைத் தடுத்து நிறுத்துகிறது: சீமான...
காரைக்காலில் இன்று காவல்துறை குறை கேட்பு முகாம்
காரைக்காலில் சனிக்கிழமை (ஏப்.26) காவல்துறை சாா்பில் குறை கேட்பு முகாம் நடைபெறுகிறது.
கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை குறை கேட்பு முகாம் நடைபெறுகிறது. இதில் கோட்டுச்சேரி, திருநள்ளாறு, நெடுங்காடு பகுதிக்குட்பட்டோரும், போக்குவரத்துக் காவல்நிலையம் தொடா்பாகவும் புகாா் அளிக்கலாம்.
அதுபோல, காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் தலைமையில் முகாம் நடைபெறுகிறது. இதில் திருப்பட்டினம், காரைக்கால் நகரம், மகளிா் காவல், சைபா் கிரைம் தொடா்பாக புகாா் அளிக்கலாம்.
பொதுமக்கள் இம் முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு காவல்துறையினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.