கோடை வெயிலில் கருகும் சின்னமனூர் வெற்றிலை - கவலையில் விவசாயிகள்
எல் - கிளாசிக்கோ: ஷ்பானிஷ் கோப்பையை வெல்லப்போவது யார்?
ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் இன்றிரவு (1.30 மணிக்கு) மோதுகிறது.
பயிற்சியாளர் ஹன்சி பிளிக் தலைமையில் இந்தாண்டில் தொடக்கத்தில் பார்சிலோனா அணி தனது பரம எதிரியான ரியல் மாட்ரிட்டை 5-2 என வீழ்த்தி ஸ்பானிஷ் சூப்பர் கோப்பையை வென்றது.
ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகளுக்கு இடையேயான ஆட்டங்களை எல் - கிளாசிக்கோ எனக் கால்பந்து ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள்.
இந்தப் போட்டி குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தடுமாறும் ரியல் மாட்ரிட் அணி
சமீபத்தில் நடந்த 5 எல் கிளாசிக்கோ போட்டிகளிலும் பார்சிலோனா அணியே வென்றுள்ளது.
ஒட்டுமொத்தமாக ஸ்பானிஷ் கோப்பை போட்டிகளில் பார்த்தாலும் பார்சிலோனா 17 வெற்றிகளும் ரியல் மாட்ரிட் 13 வெற்றிகளுடனும் உள்ளன.
இந்தாண்டில் தோல்வியே சந்திக்காத அணியாக பார்சிலோனா அணி அசத்தி வந்தது. சமீபத்தில் சாம்பியன்ஸ் லீக்கில் 2ஆம் கட்ட காலிறுதிப் போட்டியில் தோற்றது.
இந்தாண்டில் ரியல் மாட்ரிட் அணி பல முறை தோற்று சுமாராகவே விளையாடியுள்ளது.
அசத்தும் பார்சிலோனா
இந்த சீசனில் 3ஆவது முறையாக எல்-கிளாசிகோ நடக்கவிருக்கிறது. இந்தப் போட்டி ஸ்பெயினில் எஸ்டாடியோ லா கார்ட்டுஜா ஒலிம்பிகோ டி செவில்லா திடலில் நடைபெறவிருக்கிறது.
இந்தப் போட்டி 70, 000 பார்வையாளர்களுக்கு மத்தியில் நடக்கவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
ஸ்பானிஷ் கோப்பையை பார்சிலோனா 31 முறையும் ரியல் மாட்ரிட் 20 முறையும் வென்றுள்ளன.
சமீபத்திய தோல்விகளுக்கு ரியல் மாட்ரிட் அணி பார்சிலோனாவை பழிவாங்குமான ரியல் மாட்ரிட் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
யார் பலம் வாய்ந்தவர்கள்?
டிஃபென்ஸ்
பார்சிலோனாவில் குபார்சி, பால்டே, மார்டினீஸ், கவுண்டே அசத்துகிறார்கள். அதேசமயம் ரியல் மாட்ரிட்டில் ரூர்டிகோ, கார்வாஜல் மிரட்டி வருகிறார்கள். இதில் சம பலத்தில் இருக்கிறது.
ஃபார்வேடு
முன்கள வீரர்களைப் பொறுத்தவரை இரு அணிக்கும் சம அளவில் பலமாக இருக்கிறது. சொல்லப்போனால் ரியல் மாட்ரிட் சற்று கூடுதல் கேம் சேஞ்சர்களை வைத்துள்ளார்கள்.
எம்பாப்வே, வினிசியஸ் எப்போது வேண்டுமானாலும் ஆட்டத்தை மாற்றக்கூடியவர்கள். அதே சமயம் அவர்கள் சரியாக ஆடாமல் தோல்வியையும் சந்தித்து வருகிறார்கள்.
ரஃபீனியா, லாமின் யமால், லெவண்டாவ்ஸ்கி, பெர்ரன் டாரஸ் இந்த சீசனில் அசத்தி வருகிறார்கள்.
மிட் ஃபீல்டர்ஸ்
மிட் ஃபீல்டர்ஸைப் பொறுத்தவரை பார்சிலோனா அணி கூடுதல் வலுவாக இருக்கிறது. குறிப்பாக பெட்ரி அசத்தலாக விளையாடி வருகிறார். இவருடன் டானி ஓல்மா, கவி, டி ஜாங்க் அசத்தி வருகிறார்கள்.
ரியல் மாட்ரிட் அணியில் ஜுட் பெல்லிங்கம், லூக்கா மாட்ரிச், கமவிங்காவும் சவால் அளிக்கக் கூடியவர்கள்.