செய்திகள் :

Vikatan Nambikkai Awards: `96 பாகம் 2 எழுதி முடிச்சிட்டேன்; PC ஸ்ரீராம் சார் கூட..!' - பிரேம்குமார்

post image

ஆண்டுதோறும் நம்பிக்கை விதைக்கும் ஆளுமைகளைக் கொண்டாடும் நம் விகடனின் 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் `நம்பிக்கை விருதுகள்' விழா, இன்று (ஏப்ரல் 26) மாலை சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது.

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராகப் பயணத்தைக் தொடங்கி, `96', `மெய்யழகன்' என காதலையும், உறவுகளின் அன்பையும் திகட்டாதத் தேனாக விருந்தளித்த பிரேம் குமாருக்கு, `டாப் மனிதர்கள்' விருதளித்து பெருமைப்படுத்தியிருக்கிறது ஆனந்த விகடன்.

தனது மெய்யழகன் கார்த்தியின் தந்தை சிவகுமார் மற்றும் முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி, ஸ்ரீராம் ஆகியோரின் கைகளால் விருதைப் பெற்றுகொண்டுப் பேசிய பிரேம் குமார், "என்னோட பிட்னஸ் ஸ்பிர்ட் சிவக்குமார் சார். உடல்நலனுக்கு மட்டுமல்லாது, மனதுக்கும்தான். 2D மெய்யழகன் பண்ணும்போது சார் கூடவே இருந்தாரு. என் வாழ்க்கையின் முக்கியமான உறவு சிவக்குமார் சார்" என்று சிவக்குமார் குறித்து நெகிழ்ந்தார்.

`96 பாகம் 2 எழுதி முடிச்சிட்டேன்’

தொடர்ந்து பி.சி ஸ்ரீராம் குறித்து, "சார் படிச்சா இன்ஸ்டிடியூட்லதான் நானும் படிச்சேன். சார்கூட ஒர்க் பண்றதுக்கு எல்லோருக்கும் ஆச இருக்கும். எனக்கு பயமும் கூட இருந்துச்சு. ஆனா, ஒருநாள் நான் டைரக்டர் ஆகிட்டு அவர்கிட்ட ஸ்க்ரிப்ட் கொடுப்பேன்னு நான் நெனைச்சதே இல்ல." என்று பேசியவர், "96 பாகம் 2 எழுதி முடிச்சிட்டேன். பி.சி.ஸ்ரீராம் சார் கூட ஒர்க் பண்ணப் போறேன்" என அடுத்த பட அப்டேட்டும் கொடுத்தார்.

முன்னதாக பேசிய பி.சி.ஸ்ரீராம், ``யாருனே தெரியாத ஒரு பையன் எனக்கு ஒரு ஸ்கிரிப்ட் கொடுத்தான். அத படிச்சிட்டு ஆடிட்டேன். அது ரொம்ப அழகாக இருந்தது. அந்த ஸ்க்ரிப்ட்டுக்கு அதுக்கு `ஹாப்பிமென்’ பேர் வச்சிருக்கலாம். அதுதான் மெய்யழகன். பிரேம் உண்மையான மெய்யழகன். அந்த ஸ்கிரிப் முழுமையா அப்படியே வச்சிருக்கேன். பிரேம் வளரும் கலைஞன்" என்று பிரேம்குமாரை வாழ்த்தி, "96 பாகம் 2 நான் பண்ண போறேன்" என்ற அப்டேட்டும் கொடுத்தார்.

Vikatan Nambikkai Awards : `சுஜாதா போல சயின்ஸை யூடியூப்பில் செய்பவர் Mr.GK' - இயக்குநர் ரவிக்குமார்

ஆண்டுதோறும் நம்பிக்கை விதைக்கும் ஆளுமைகளை கொண்டாடும் நம் விகடனின் இந்தாண்டிற்கான நம்பிக்கை விருது வழங்கும் விழா, இன்று (ஏப்ரல் 26) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றுது.2024-ஆம் ஆண்டின் டாப் 10 மனிதர்க... மேலும் பார்க்க

Vikatan Nambikkai Awards : நம்பிக்கையை விதைக்கும் ஆளுமைகளைக் கொண்டாடும் அழகிய தருணங்கள்..! | Album

எதிர்காலத்துக்கான நன்னம்பிக்கை - நான் முதல்வன் திட்டம் Vikatan Nambikkai Awards அன்பின் கலைஞன் ச.பிரேம்குமார் அன்பின் கலைஞன் ச.பிரேம்குமார் கிரிக்கெட் வீராங்கனை கமலினிகிரிக்கெட் வீராங்கனை கமலினிVikata... மேலும் பார்க்க

Vikatan Nambikkai Awards : `என் வாழ்வின் நம்பிக்கை மனிதர்கள்; தனுஷ் பட அப்டேட்' - மாரி செல்வராஜ்

ஆண்டுதோறும் நம்பிக்கை விதைக்கும் ஆளுமைகளைக் கொண்டாடும் நம் விகடனின் 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் `நம்பிக்கை விருதுகள்'விழா, இன்று (ஏப்ரல் 26) மாலை சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது.இதில், அன்றாட ... மேலும் பார்க்க

Vikatan Nambikkai Awards : மகத்தான தமிழர்கள் மகுடம் சூடும் மேடை... விகடன் நம்பிக்கை விருது வழங்கும் விழா! | Live

விகடன் நம்பிக்கை விருதுகள் 2024ஆண்டுதோறும் நம்பிக்கை விதைக்கும் ஆளுமைகளை கொண்டாடும் நம் விகடனின் இந்தாண்டிற்கான நம்பிக்கை விருது வழங்கும் விழா, இன்று மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவிரு... மேலும் பார்க்க

விகடன் நம்பிக்கை விருதுகள் : மகத்தான தமிழர்கள் மகுடம் சூடும் மேடை - ஆளுமைகளை கொண்டாட அனைவரும் வருக!

ஆண்டுதோறும் நம்பிக்கை விதைக்கும் ஆளுமைகளை கொண்டாடும் நம் விகடனின் இந்தாண்டிற்கான நம்பிக்கை விருது வழங்கும் விழா, வருகிற 26.04 25, சனிக்கிழமை மாலை 5 மணி அளவில், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவிருக்கிற... மேலும் பார்க்க

'பெண்ணால் ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த முடியுமா?' - விடை தேடும் நிகழ்ச்சி

மேஜிக் 20 தமிழ் நிறுவனத்தின் சார்பில் மேஜிக் பெண்கள் 2.0 நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது. பெண் ஆளுமைகள் ஒன்றிணையும் இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் 29-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும்.இந்த நிகழ்ச்சியானது... மேலும் பார்க்க