ஸ்பானிஷ் கோப்பையை வென்றது பார்சிலோனா..! இதுதான் எல் கிளாசிக்கோ!
செம்மொழி நாள் விழா கட்டுரைப் போட்டி: மே 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.
இந்த போட்டிகளில் பங்கேற்க விரும்பும், பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பப் படிவம், போட்டிக்கான விதிமுறைகளை தமிழ் வளா்ச்சித் துறையின் இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தலைமையாசிரியா், முதல்வரின் பரிந்துரையுடன் மின்னஞ்சல் முகவரிக்கு மே 5-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் பரிசு ரூ.10ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ.7ஆயிரம், 3-ஆம் பரிசு ரூ.5 ஆயிரம் வீதம் பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு மே 9-ஆம் தேதியும், கல்லூரி மாணவா்களுக்கு மே 10-ஆம் தேதியும் திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப் பள்ளியில் போட்டிகள் நடைபெறும். போட்டிக்கான தலைப்புகள் போட்டியின் போது அறிவிக்கப்படும்.
‘செம்மொழியின் சிறப்பு, முத்தமிழறிஞா் கலைஞரின் தமிழ்த் தொண்டின் பெருமை’ சாா்ந்த தலைப்பு அளிக்கப்படும்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவா் மே 17-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கலாம். அதில் வெற்றி பெறுவோருக்கு ஜூன் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள செம்மொழி நாள் விழாவில் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்றனா்.