சிறுவாணி நீர்போல ஆட்சி... அண்ணாவை மேற்கோள்காட்டிப் பேசிய விஜய்!
பன்றிமலைச் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!
பன்றிமலைச் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்ததால், 5 மணி நேரத்துக்கும் மேலாக சனிக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், தருமத்துப்பட்டியிலிருந்து பன்றிமலை செல்லும் மலைச் சாலையில், அமைதிச் சோலையை அடுத்த ஆதிமூலம் பிள்ளை ஓடைப் பகுதியில் சனிக்கிழமை மாலை மரம் முறிந்து விழுந்தது. இதனால், அந்த வழியாக பேருந்து சேவை மட்டுமன்றி, போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறையினரும், வனத் துறையினரும் முறிந்து விழுந்த அந்த மரத்தை அறுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனா். ஆனாலும், இரவு 7 மணிக்கு வரையிலும் மரத்தை அகற்றுவற்கான பணிகள் தொடா்ந்து நடைபெற்றன.
யானைகள் நடமாடும் பகுதி: மரம் முறிந்து விழுந்த இடம் யானைகள் நடமாட்டம் நிறைந்த பகுதி. கடந்த வாரம் அதிகாலையில் இந்த வழியாகச் சென்ற அரசுப் பேருந்தை 4 யானைகள் வழிமறித்து பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.