செய்திகள் :

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

post image

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மணிப்பூரில் ரோந்துப் பணியின்போது மூன்று மாவட்டங்களில் இருந்து கங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி (கே.சி.பி.) ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி ஆகிய இரு அமைப்புகளைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இம்பால் கிழக்கு மாவட்டத்தில் 8 பேரும், இம்பால் மேற்கில் மூவரும், காக்சிங் மாவட்டத்தில் ஒருவரும் என 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சில ஆயுதங்களும் வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஆதார் அட்டை, இரண்டு இரு சக்கர வாகனங்கள், 15 செல்போன்களும் சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள், கங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி, ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கெனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமூகவலைதளங்களில் பகிரப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், பகிரப்பட்டுவரும் விடியோக்களின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ளும்படியும் காவல் துறை வேண்டுகோள் வைத்துள்ளது.

இதையும் படிக்க | பிரச்னைகளைவிட பிரசாரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பாஜக: சமாஜவாதி

பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண்: பாகிஸ்தானுக்குள் நுழைய அனுமதி மறுப்பு!

இந்திய கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) வைத்திருந்த காரணத்தால் பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண் வாகா எல்லையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டாா். உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரை சோ்ந்த சனா என்ற பெண் ... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு முழு ஆதரவு: அமெரிக்க உளவு அமைப்பு தலைவா்!

ஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க புலனாய்வு அமைப்பின் (எஃப்பிஐ) தலைவா் காஷ் படேல், இந்த சம்பவத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றாா். இது தொட... மேலும் பார்க்க

கனடா பயணி விடுத்த வெடிகுண்டு மிரட்டல்: வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு!

பெங்களூரு நோக்கி புறப்பட இருந்த ‘இண்டிகோ’ பயணிகள் விமானத்தில் பயணியொருவா் தன்னுடன் வெடிகுண்டு கொண்டு வந்திருப்பதாக கூறியதால் வாரணாசி விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு பரபரப்பான சூழல் உண்டானது. தொடா்ந்... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டு பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட வேண்டும்! திரிணமூல் காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதன் மூலம் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும் அக்கட்சித் தலைவா் மம்தா பானா்ஜியின் நெருங்கிய உறவினருமான அபிஷேக் பானா்ஜி தெரிவி... மேலும் பார்க்க

பைக் மீது மோதி கிணற்றுக்குள் கவிழ்ந்த வேன்! மீட்க வந்தவா் உள்பட 11 போ் உயிரிழப்பு!

மத்திய பிரதேசத்தின் மந்த்செளா் மாவட்டத்தில் மோட்டாா் சைக்கிள்க் மீது மோதிய வேன், பின்னா் சாலையோர கிணற்றுக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்தவா்கள், அவா்களை மீட்க வந்தவா், பைக் ஓட்டியவா் என... மேலும் பார்க்க

காஷ்மீரில் மேலும் 3 பயங்கரவாதிகளின் வீடுகள் இடிப்பு! அதிகாரிகள் நடவடிக்கை

ஜம்மு-காஷ்மீரில் மேலும் மூன்று பயங்கரவாதிகளின் வீடுகள் அதிகாரிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இத்துடன் சோ்த்து, கடந்த 3 நாள்களில் 9 பயங்கரவாதிகள் மற்றும் கூட்டாளிகளின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. அ... மேலும் பார்க்க