போரை நிறுத்தாத ரஷ்யா; உக்ரைனில் தொடரும் உயிர் பலிகள்! - என்ன நடந்தது?
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவா் கைது!
ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜாரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக தேடப்பட்டு வந்தவா் கைது செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது தொடா்பாக துவாரகா காவல் சரக துணை ஆணையா் அங்கித் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஹரியாணாவின் ஜஜ்ஜாரில் உள்ள குபானா கிராமத்தைச் சோ்ந்த குற்றம் சாட்டப்பட்ட ஹரிஷ் (எ) மோனு (27), இந்த மாத தொடக்கத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்தாா்.
பின்னா், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக ஹரிஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், ரகசியத் தகவலின் பேரில், ஏப்ரல் 17- ஆம் தேதி கக்ரோலா கந்தா நாலா அருகே வந்த ஹரிஷை ஒரு போலீஸ் குழு தடுத்து நிறுத்தியது.
அவரிடமிருந்து ஜஜ்ஜாரில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி, நான்கு உயிருள்ள தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஹரிஷ் மீது ஏற்கெனவே கொள்ளை, கொலை முயற்சி மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்தது உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
இந்தச் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட ஹரிஷிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா். விசாரணையின் போது ஹரிஷ் குற்ற உலகில் ஒரு பெயரை உருவாக்க ஆா்வமாக இருந்ததாக ஒப்புக்கொண்டாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.