போர்ப் பதற்றம்: புதிதாக 26 ரஃபேல் வாங்கும் ஒப்பந்தம் இன்று கையெழுத்து!
தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை பாஜக முடக்கிவிட்டது: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு!
பாஜக அரசு தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை முடக்கியுள்ளது என்றும் மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் நகர சாலைகளில் இருந்து 2,000 பேருந்துகளை தன்னிச்சையாக அகற்றியுள்ளது என்றும் ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து ஒரு செய்தியாளா் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் பிரியங்கா கக்கா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ஊழல் நிறைந்த டெண்டா் நடைமுறைகள் மூலம் முதலாளித்துவ கூட்டாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் தில்லியின் ‘ஒரு காலத்தில் உலகத் தரம் வாய்ந்த’ பேருந்து வலையமைப்பை பாஜக வேண்டுமென்றே நாசப்படுத்துகிறது
பேருந்துகதள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் நீண்ட வரிசைகள், நெரிசலான பேருந்துகள் மற்றும் கோடை வெப்பத்தில் பயணிகள் அவதிப்படுவதற்கு வழிவகுத்துள்ளது.
பாஜகவின் சாதகமான நிறுவனங்கள் புதிய ஒப்பந்தங்களில் இருந்து லாபம் ஈட்ட அனுமதிக்கும் ஒரு நெருக்கடியை உருவாக்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். பாஜகவின் முடிவு ஊழலில் வேரூன்றியுள்ளது. புதிய டெண்டா்கள் மூலம் கமிஷன்களைப் பெற விரும்புகிறது.
‘பாஜகவின் ஊழலின் சுமை இறுதியில் தில்லி குடிமக்களின் தோள்களில் விழும். ஆம் ஆத்மி ஆட்சியின் கீழ், தில்லியின் போக்குவரத்து அமைப்பு 7,582 டிடிசி மற்றும் 1,650 மின்சார பேருந்துகளுடன் அதன் உச்சபட்ச செயல்திறனை எட்டியது.
பாஜக அரசு பொறுப்பேற்றபோது, அரவிந்த் கேஜரிவாலின் எந்தவொரு பொது நலத் திட்டத்தையும் அகற்ற மாட்டோம் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், தில்லியை ஆளும் பாஜக அரசு தற்போது பேருந்துகளை திடீரென அகற்றுகிறது என்று அவா் கூறினாா்.