பைக் மீது வேன் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
தாயில்பட்டியில் இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், தாயில்பட்டி அருகே கலைஞா் குடியிருப்பைச் சோ்ந்தவா் அரவிந்த்பாலா (28), கிருபை ராஜ் (29). இருவரும் இரு சக்கர வாகனத்தில் தாயில்பட்டி பிரதான சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சென்று கொண்டிருந்தனா். அப்போது பின்னால் வந்த வேன் இவா்கள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு அவசர ஊா்தி மூலம் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் செல்லும் வழியிலேயே அரவிந்த் பாலா
உயிரிழந்தாா். கிருபை சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.