கருணாநிதி பன்னாட்டு மாநாட்டு அரங்கம் பணியை விரைந்து முடிக்க அமைச்சா் எ.வ.வேலு உத...
உ.பி.: கைவிடப்பட்ட காரில் இளைஞர் சடலம், அருகே மது பாட்டிலும் மீட்பு
உத்தரப் பிரதேசத்தில் காரில் இருந்து இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மௌரானிபூர் வட்ட அதிகாரி ராம்வீர் சிங் கூறுகையில், கஜுராஹோ சாலையில் உள்ள பரியாபைர் கிராசிங் அருகே கைவிடப்பட்ட நிலையில் கார் இருந்ததாக சனிக்கிழமை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. ஆய்வு செய்தபோது, 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஓட்டுநர் இருக்கையில் இறந்து கிடந்தார்.
மேலும் பூட்டப்பட்டிருந்த காரிலிருந்து ஒரு காலி மது பாட்டிலும் மீட்கப்பட்டது. பூட்டப்பட்ட காரினுள் மூச்சுத் திணறல் காரணமாக இளைஞர் இறந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. காரின் பதிவு எண்ணின் உதவியுடன், இறந்தவர் மத்தியப் பிரதேசத்தின் டாப்ராவைச் சேர்ந்த ஜஸ்ப்ரீத் சிங் என போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
நடுவர் மீது தாக்குதல்: மன்னிப்பு கேட்ட ரியல் மாட்ரிட் வீரர்!
சடலம் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது என்றார். ஜஸ்ப்ரீத்தின் குடும்பத்தினர் கூறுகையில், அவர் குடும்ப தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார். இருப்பினும், அவர் தனது வீட்டிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கஜுராஹோ சாலையை எப்படி அடைந்தார் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.