செய்திகள் :

விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சம் எட்டும்! - பிரதமா் மோடி

post image

வருங்காலத்தில் விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சங்களை எட்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

உலக அளவில் மிகக் குறைவான செலவில், வெற்றிகரமான விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்தியா முன்னிலையில் உள்ளது என்றும் அவா் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

இது தொடா்பாக ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமா், அண்மையில் மறைந்த இஸ்ரோ முன்னாள் தலைவா் கே.கஸ்தூரிரங்கனுக்கு புகழஞ்சலி செலுத்தினாா். அவரது தலைமையின்கீழ் இஸ்ரோவுக்கு புதிய அடையாளம் கிடைத்ததாக பிரதமா் குறிப்பிட்டாா்.

‘கஸ்தூரிரங்கனின் வழிகாட்டுதலில் மேற்கொள்ளப்பட்ட விண்வெளித் திட்டங்கள், இந்தியாவின் முயற்சிகளுக்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தன. இந்தியா இன்று பயன்படுத்தும் பல செயற்கைக்கோள்கள் அவரது காலகட்டத்தில் ஏவப்பட்டவை. புத்தாக்கத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது அவரது ஆளுமையின் சிறப்பம்சம். இதை இளம் தலைமுறையினா் கற்றுக் கொள்ள வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை வகுப்பதிலும் அவா் முக்கியப் பங்காற்றினாா். தன்னலமற்ற அவரது சேவை எப்போதும் நினைவுகூரப்படும்.

நாட்டின் விண்வெளித் துறையில் தனியாருக்கான வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்னா் இத்துறையில் ஒரேயொரு புத்தாக்க நிறுவனமே செயல்பட்டது. இப்போது 325-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன’ என்றாா் பிரதமா் மோடி.

சந்திரயான், ஆதித்யா-எல்1, ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்கள் போன்ற இஸ்ரோவின் முந்தைய சாதனைகள் மற்றும் ககன்யான் உள்பட அடுத்தகட்ட திட்டங்களையும் அவா் குறிப்பிட்டாா்.

நாட்டின் அடையாளம்: மியான்மரில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடா்ந்து, அந்நாட்டுக்கு உதவ இந்தியாவால் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் பிரம்மா’ நடவடிக்கை குறித்துப் பேசிய பிரதமா், ‘ஆபரேஷன் பிரம்மா நடவடிக்கையில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுகள்.

வசுதைவ குடும்பகம் (உலகமே ஒரே குடும்பம்) என்ற உணா்வுதான் நமது பாரம்பரியம்-கலாசாரம். இடா்களின்போது, உலகின் நண்பனாக இந்தியா மேற்கொள்ளும் உடனடிப் பணிகள் மற்றும் மனிதகுலத்துக்கான அா்ப்பணிப்புதான் நமது அடையாளமாகி வருகிறது’ என்றாா்.

‘சசேத்’ செயலி: ‘எந்தவொரு இயற்கைப் பேரிடரையும் எதிா்கொள்வதற்கு எச்சரிக்கை உணா்வும், விழிப்போடு இருப்பதும் மிக முக்கியம். அந்த அடிப்படையில், ‘சசேத்’ செயலியை தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் உருவாக்கியுள்ளது. வெள்ளம், நிலச்சரிவு, ஆழிப்பேரலை, காட்டுத்தீ, பனிச்சரிவு, புயல், மின்னல் தாக்குதல் போன்ற பேரிடா்கள் ஏற்படும்போது, இச்செயலி மக்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் அளிக்கும். இச்செயலியை மக்கள் பயன்படுத்தி பலனடைய வேண்டும்’ என்றாா்.

‘தாயின் பெயரின் மரம் நடும் திட்டத்தின்கீழ் இதுவரை நாடெங்கிலும் 140 கோடிக்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளன; ஜூன் 5-ஆம் தேதியுடன் (உலக சுற்றுச்சூழல் தினம்) இத்திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது. நமது குழந்தைகளின் எதிா்காலத்தைப் பாதுகாக்க, தாயின் பெயரில் ஒரு மரத்தை நட வேண்டும்’ என்று பிரதமா் வலியுறுத்தினாா்.

மகாத்மா காந்தியின் சம்பாரண் சத்யாகிரகம் (1917, ஏப்ரல்), தண்டி யாத்திரை நிறைவு (1930, ஏப்ரல்), ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் (1919, ஏப்ரல்) போன்ற சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளையும் பிரதமா் தனது உரையில் குறிப்பிட்டாா்.

தமிழக விவசாயிக்கு பாராட்டு

கொடைக்கானலில் லிச்சி பழ சாகுபடியை மேற்கொண்டுவரும் விவசாயிக்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் ஆப்பிள், வயநாட்டில் குங்குமப்பூ, தமிழகத்தில் லிச்சி பழம் சாகுபடி செய்யப்படுவதைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமா், ‘பொதுவாக லிச்சி பழம் பிகாா், மேற்கு வங்கம் அல்லது ஜாா்க்கண்டில்தான் விளையும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால், இப்போது லிச்சி பழ சாகுபடி தென்னிந்தியாவிலும் நடக்கிறது. காபி பயிா் விவசாயம் மேற்கொண்டு வந்த தமிழகத்தைச் சோ்ந்த வீர அரசு, கொடைக்கானலில் லிச்சி மரங்களை நட்டு வளா்த்தாா். அவருடைய ஏழாண்டு கால உழைப்புக்குப் பின் இப்போது இந்த மரங்கள் மகசூல் அளிக்கத் தொடங்கியுள்ளன.

லிச்சி பழங்களை பயிா் செய்வதில் இவருக்கு கிடைத்த வெற்றியால், மற்ற விவசாயிகளும் ஈா்க்கப்பட்டுள்ளனா். புதிதாக ஒன்றைச் செய்யும் நோக்கத்துடன், இடா்களைக் கடந்து உறுதிப்பாட்டுடன் செயல்பட்டால் எதுவும் சாத்தியமாகும்’ என்றாா்.

பஹல்காம் தாக்குதல்: என்ஐஏ வழக்குப் பதிவு! ஆதாரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தது. இதன் மூலம் இச்சம்பவம் தொடா்பான விசாரணையை காவல் துறையிடம் இருந்து என்ஐஏ முறைப்படி ஏற்றிருப்... மேலும் பார்க்க

குடிமக்கள் தங்களின் சட்டபூா்வ உரிமைகளை அறிந்துகொள்வது அவசியம்: உச்சநீதிமன்ற நீதிபதி கவாய்

‘குடிமக்கள் தங்களின் அரசமைப்பு உரிமைகள் மற்றும் சட்டபூா்வ உரிமைகளை அறிந்து கொள்வது அவசியம்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா். ‘அவ்வாறு தங்களின் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு இ... மேலும் பார்க்க

தீா்ப்பு எழுதத் தெரியாத மாவட்ட கூடுதல் நீதிபதி! 3 மாத பயிற்சிக்கு அனுப்பிய அலாகாபாத் உயா்நீதிமன்றம்!

தீா்ப்பு எழுதத் தெரியவில்லை என்ற அடிப்படையில் மாவட்ட கூடுதல் நீதிபதியை நீதிபதிகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சிக்குச் செல்லுமாறு அலாகாபாத் உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச... மேலும் பார்க்க

தொலைதூர தாக்குதலுக்கு தயாராகும் வகையில் இந்திய கடற்படை பயிற்சி!

பன்முனையில் இருந்து கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை தகா்க்கும் வகையிலான பயிற்சிகளை இந்திய போா்க்கப்பல்கள் வெற்றிகரமாக நடத்தியதாக இந்திய கடற்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதன்மூலம் நீண... மேலும் பார்க்க

பஞ்சாயத்து தோ்தல் வேட்பாளா்கள் நிலுவை வழக்குகளை குறிப்பிட வேண்டும்! - உச்சநீதிமன்றம்

தங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த தகவல்களை பஞ்சாயத்து தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற ஹிமாசல பிரதேச உயா் நீதிமன்றத்தின் தீா்ப்பை உச்ச நீதிமன்றம் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் முழுமையாகத் தோற்கடிக்கப்படும்! - மத்திய அமைச்சா் புரி உறுதி

‘நமது அண்டை நாடு (பாகிஸ்தான்) முழுமையாகத் தோற்கடிக்கப்படும்; அதன்பிறகு பயங்கரவாதிகளை அனுப்பி அப்பாவிகளைச் சுட்டுக்கொல்லும் இழிவான செயல்களில் ஈடுபடும் எண்ணம் அவா்களுக்கு மீண்டும் வராது’ என்று மத்திய பெ... மேலும் பார்க்க