சென்னை காவல் துறைக்கு 4 மாதங்களில் 69,000 அவசர அழைப்புகள்! மாநகர காவல் துறை
எந்தாண்டும் இல்லாத வகையில் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடத்தப்படும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
மதுரை: எந்தாண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு சித்திரைத் திருவிழா சிறப்பாக நடத்தப்படும் என தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மதுரை சித்திரைத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ.சங்கீதா தலைமை வகித்தாா். தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி, தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
அரசியல் சாசனத்தைச் சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம்
பின்னர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
மதுரை சித்திரைத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எந்தாண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு சித்திரைத் திருவிழா சிறப்பாக நடத்தப்படும்.
கடந்த கால அனுபவங்களை கொண்டு வைத்து சித்திரைத் திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
வைகை ஆற்றில் விரைவில் கள்ளழகர் திருவிழாவிற்காக தண்ணீர் திறக்கப்படும்.
மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் திருக்கல்யாணம் மற்றும் அழகா் வைகை ஆற்றில் எழுந்தருளல் திருவிழாவின்போது விஐபிக்களுக்கு வழக்கமான அடையாள அட்டையை விட ஸ்கேன் செய்து சோதிக்கும் வகையிலான அடையாள அனுமதி அட்டை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.