செய்திகள் :

41 தலிபான்கள் சுட்டுக்கொலை: பாகிஸ்தான் ராணுவம்

post image

பெஷாவா்: ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவ முயன்றபோது பாகிஸ்தான் ராணுவத்தினருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) குழுவைச் சேர்ந்த 41 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து பழங்குடியினா் பகுதியான வடக்கு வஜிரிஸ்தான் மாவட்ட எல்லை வழியாக பிபக் கர் பகுதிக்கு அருகில் அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் எல்லைக்குள் வெள்ளிக்கிழமை இரவு ஊடுருவினா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

இதில், 41 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், கொல்லப்பட்டவா்களில் பெரும்பாலானவா்கள் ஆப்கானிஸ்தானைச் சோ்ந்தவா்கள் என்று அதிகாரிகள் கூறினர்.

எல்லையில் போர் பதற்றம்: 130 அணு ஆயுதங்கள் தயார் - பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சை பேச்சு

துப்பாக்கிச் சண்டையைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் கூறினார்.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த சண்டை குறித்து ராணுவ ஊடகப் பிரிவிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை.

பாகிஸ்தானில் இயங்கிய பல்வேறு இஸ்லாமிய போராளிகள் குழுக்களை ஒரே குடைக்குள் கொண்டு வரும் வகையில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு உருவாக்கப்பட்டது. ராணுவக் கட்டுப்பாட்டுகளுக்கு எதிராக 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்றளவிலும் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பிராந்தியங்களில் வலுவாக இயங்கி வருகிறது.

நாட்டிற்கே முன்னோடியாக திகழும் திராவிட மாடல் திட்டங்கள்: துணை முதல்வர் உதயநிதி

நாட்டிற்கே முன்னோடியாக திராவிட மாடல் திட்டங்கள் திகழுவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை கோயம்புத்தூர் மாவட்டம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ம... மேலும் பார்க்க

ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை

சேலம்: ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கனமழை பெய்து வருகிறது, இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சேலம் மாவட்டம்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் சமூக ஆா்வலா் சுட்டுக்கொலை

ஸ்ரீநகா்: பஹல்காம் தாக்குதலுக்கு நான்கு நாள்களுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் சமூக ஆா்வலா் குலாம் ரசூல் (45) பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப... மேலும் பார்க்க

தயாளு அம்மாள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மனைவியும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயாா் தயாளு அம்மாள் (92) உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். சென்னை கோபாலபுரத்தில் உள்ள... மேலும் பார்க்க

நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்களில் 43% தமிழ்நாடு பெற்றுள்ளது: துணை முதல்வர் உதயநிதி

கோவையில் அமையவுள்ள சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்த தமிழக துணை முதல்வர் உதயநிதி, மகளிருக்கான திட்டங்களால் நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்களில் 43% தமிழ்நாடு பெற்றுள்ளது என... மேலும் பார்க்க

எந்தாண்டும் இல்லாத வகையில் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடத்தப்படும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை: எந்தாண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு சித்திரைத் திருவிழா சிறப்பாக நடத்தப்படும் என தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். மதுரை மாவட்ட ஆட்சியா் அல... மேலும் பார்க்க