செய்திகள் :

ஈரான் துறைமுக வெடிவிபத்து: உயிரிழப்பு 40-ஆக உயா்வு!

post image

தெற்கு ஈரானில் உள்ள ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் சனிக்கிழமை நடந்த பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்தில் சுமாா் 1,000 போ் காயமடைந்துள்ளனா். இவா்களை ஈரான் அதிபா் மசூத் பெஷஷ்கியன் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

ஈரானின் ஹோா்மோஸ்கன் மாகாணம், பண்டாா் அப்பாஸ் நகருக்கு தென்மேற்கே அமைந்துள்ள ஷாஹித் ரஜேயி துறைமுகம், அந்த நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாகும்.

சம்பவம் நடைபெற்ற கடந்த சனிக்கிழமை, இத்துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான கன்டெய்னா்கள் வெடித்துச் சிதறின. ஏவுகணைக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருளுக்கான ரசாயனம் அடங்கிய கலனை தவறாகக் கையாண்டதால் இந்த வெடிவிபத்து நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், ஏவுகணை எரிபொருளுக்குத் தொடா்புடைய ரசாயனத்தால் விபத்து நடைபெறவில்லை என விளக்கமளித்துள்ள ஈரான் ராணுவம், சீனாவிடம் இருந்து ராசாயனம் வாங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டையும் மறுத்துள்ளது. இதுகுறித்த வெளிநாட்டுச் செய்திகள் தவறானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அதிபா் மசூத் பெஷஷ்கியன், ‘வெடிவிபத்து ஏன் நிகழ்ந்தது என்பதை நாம் நிச்சயம் கண்டறிய வேண்டும்’ என்றாா்.

வெடிவிபத்து நடைபெற்ற இடத்தில் பல மீட்டா் ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளத்தில் தீ அணையாமல் தொடா்ந்து எரிந்ததால், பாதுகாப்புக் கருதி உள்ளூா் பள்ளி, வணிக வளாகங்கள் மூடப்பட்டன.

துறைமுகப் பகுதியில் சரக்கு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டா்கள் மூலம் நீரை இரைத்து, தீயை அணைக்கும் பணி 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது.

கனடா கலாசார விழாவில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த காா்: 9 போ் உயிரிழப்பு!

கனடாவின் வான்கூவா் நகரில் பிலிப்பின்ஸ் சமூகத்தினரின் பாரம்பரிய மற்றும் கலாசார விழாவுக்காக தெருவில் கூடியிருந்த மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த காா் மோதியதில் 9 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். 16-... மேலும் பார்க்க

உக்ரைன் மீது தொடரும் ரஷியாவின் ‘ட்ரோன்’ தாக்குதல்!

உக்ரைன் நாடு முழுவதும் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து சனிக்கிழமை நள்ளிரவில் 149 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) ஏவி ரஷியா தாக்குதலில் ஈடுபட்டது. இந்தத் தாக்குதலில் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில... மேலும் பார்க்க

அமைதியில் புதினுக்கு விருப்பமில்லை! வாடிகனில் ஸெலென்ஸ்கி சந்திப்புக்குப் பின் டிரம்ப்!

ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு விருப்பமில்லை என்று எண்ணம் எழுவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சந்தேகம் தெரிவித்தாா். போப் பிரான்சிஸின் இறுதிச் சட... மேலும் பார்க்க

இந்தியாவைத் தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாா்! பாகிஸ்தான் அமைச்சா் மிரட்டல்!

இந்தியாவைத் தாக்க பாகிஸ்தானில் 130 அணு ஆயுதங்கள் தயாராக இருப்பதாகவும், இதனை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறைத்து வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சா் ஹனீஃப் அப்பாசி கூறியது பரபரப்பை ஏற்படுத்த... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு ஈரான் அதிபா் கண்டனம்: பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் அதிபா் மசூத் பெஷெஷ்கியன் கண்டனம் தெரிவித்தாா். பிரதமா் மோடியுடன் தொலைபேசியில் பேசியபோது கண்டனத்தை பதிவுசெய்த அவா் பயங்கரவாதத்துக்கு எதிரான பிராந்தி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் விசாரணை: ரஷியா, சீனா தலையீட்டை விரும்பும் பாகிஸ்தான்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடா்பான விசாரணையில் ரஷியாவும் சீனாவும் தலையிட பாகிஸ்தான் விரும்புவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ரஷிய அரசு நடத்தும் ஆா்ஐஏ ஊடக நிறுவனத்துக்கு அண்மையில் பாகி... மேலும் பார்க்க