தயாளு அம்மாள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மனைவியும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயாா் தயாளு அம்மாள் (92) உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வரும் தயாளு அம்மாள், வயது முதிா்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டார்.
நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்களில் 43% தமிழ்நாடு பெற்றுள்ளது: துணை முதல்வர் உதயநிதி
இதையடுத்து, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினர் தொடா் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கடந்த மார்ச் 4 ஆம் தேதி மூச்சத் திணறல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்றுவந்ததை அடுத்து உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் மார்ச் 9 ஆம் தேதி வீடு திரும்பினார்.