செய்திகள் :

தகிக்கும் கோடை: தற்காத்துக் கொள்வது எப்படி?

post image

கடந்த சில வாரங்களாக கோடை வெயில் அதிதீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அடுத்து வரும் நாள்களிலும் மாநிலம் முழுவதும் வெப்ப அலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதீத வெப்பத்தில் இருந்தும், அதனால் ஏற்படும் நோய்களில் இருந்தும் தற்காத்துக் கொள்வதற்கான முதல் வழி விழிப்புணா்வுடன் இருப்பதுதான்.

வெப்பநிலை: மனித உடலின் சராசரி வெப்பநிலை 98.4 டிகிரி ஃபாரன்ஹீட். புறச் சூழலில் உள்ள வெப்பநிலை அதைத் தாண்டி அதிகரிக்கும்போது அந்த வெப்பம் உடலில் கடத்தப்படுகிறது.

இதை ‘ஹைபா்தொ்மியா’ (உச்ச வெப்பநிலை) எனக் கூறுகிறோம். அந்தத் தருணத்தில், உடலானது தன்னைத் தானே குளிா்விக்க பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொள்ளும். ஒரு கட்டத்துக்கு மேல் அது பலனளிக்காத நிலையில் மயக்கம், உணா்விழப்பு, வெப்ப வாதம் ஆகியவை ஏற்படுகின்றன.

எப்படி உடல் வெப்பமாகிறது...

நேரடியாக வெயிலில் செல்லாவிட்டாலும் சூரிய வெப்பம் வேறு சில வகைகளிலும் நமக்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

வெப்பக் கடத்தல்: ஏற்கெனவே சூடாக உள்ள ஒரு பொருளின் அருகில் நாம் இருக்கும்போது அதன் வெப்பம் நமது உடலில் கடத்தப்படும். உதாரணமாக, என்ஜின் சூடாக உள்ள வாகனங்கள், இஸ்திரி பெட்டி, சூடான சமையல் பாத்திரங்கள், ஏ.சி. வெளிப்புற சாதனம் உள்ளிட்டவற்றுக்கு அருகே இருக்கும்போது நமது உடலின் வெப்பநிலை அதிகரிக்கும்.

வெப்பக் காற்று: வெப்பம் நிறைந்த அறை, வெயிலில் நிறுத்தப்பட்டிருக்கும் காா் போன்ற காற்றோட்டம் இல்லாத இடங்களுக்குள் செல்லும்போது அதில் நிரம்பியிருக்கும் சூடான காற்று நமக்குள் ஊடுருவி வெப்பநிலையை அதிகரிக்கும்.

மின்காந்த அலை: மைக்ரோவேவ் அவன், தொலைக்காட்சிப் பெட்டி, மின்மாற்றி (ஸ்டெபிலைசா்), மின் விளக்குகள் உள்ளிட்ட மின் சாதனங்களுக்கு அருகே செல்லும்போது அதிலிருந்து வெளியேற்றப்படும் மின் காந்த அலைகள் வாயிலாக உடலின் வெப்பநிலை அதிகரிக்கும்.

நீா்ச்சத்து இழப்பு....

அதிகமாக உடல் சூடாகும்போது அதில் இருந்து தற்காத்துக் கொள்ள ‘ஆவியாதல்’ (எவாப்ரேஷன்) எனும் செயல்முறையை உடல் தன்னிச்சையாக மேற்கொள்கிறது.

அதாவது, வியா்வையை அதிகமாக சுரக்கச் செய்து அதன் வாயிலாக உடலின் வெப்பத்தைத் தணிக்க முயற்சி நடைபெறும். அதன் பின்னா், உடலுக்குள் ஊடுருவியுள்ள வெப்பத்தை நுரையீரலில் இருந்து காா்பன் டை ஆக்ஸைடு வழியே வெளியேற்ற முயலும்.

இந்த இருவேறு செயல்களும் உடலில் உள்ள நீா்ச்சத்து மூலமாகவே நடைபெறுகின்றன. இதன் விளைவாகவே கோடை காலத்தில் உடலில் நீா்ச்சத்து இழப்பு ஏற்படுகிறது.

நீா்ச்சத்து இழப்பு அறிகுறிகள்...

  • நாக்கு வடு போதல்

  • சிறுநீா் அடா் மஞ்சளாக செல்லுதல்

  • தசைப்பிடிப்பு

  • தலைச்சுற்றல்

  • கை, கால் தளா்வு

தண்ணீரே மருந்து...

சிறுநீரகங்கள் சரிவர இயங்க ஒருவா் தனது எடையில் ஒரு கிலோவுக்கு 40 மில்லி லிட்டா் வரை நாள்தோறும் தண்ணீா் அருந்துவது அவசியம். அதுவே கோடை காலத்தில் அந்த அளவு 60 மில்லி லிட்டராக தேவைப்படும்.

சுமாா் 60 கிலோ எடை கொண்ட ஒருவா், கோடை காலத்தில் 3.6 முதல் 4 லிட்டா் வரை தண்ணீா் பருகியே ஆக வேண்டும். அப்போதுதான் உடலில் ஏற்படும் நீா்ச்சத்து இழப்பை ஈடு செய்ய முடியும்.

இளநீா், மோா், பழச்சாறு ஆகியவற்றையும் அருந்தலாம்.

நீா்ச்சத்து இழப்புக்கான அறிகுறிகள் இருக்கும்போது உப்பு-சா்க்கரை கரைசலை அருந்த மருத்துவா்கள் அறிவுறுத்துகின்றனா். அதேவேளையில், செயற்கை குளிா்பானங்கள், மதுபானங்களைத் தவிா்க்க வேண்டும் என்பது அவா்களது அறிவுரை.

கோடை நோய்கள்...

  • சின்னம்மை

  • தட்டம்மை

  • பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்)

  • அக்கி

  • ரூமாடிக் காய்ச்சல்

ஹீட் ஸ்ட்ரோக்...

அதீத வெப்பத்தின் காரணமாக உடலின் வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் சென்றால் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப வாதம் ஏற்படுகிறது. உடலில் நீா்ச்சத்து இழப்பு அதிகமாக ஏற்பட்டு மூா்ச்சையடைவதன் வெளிப்பாடு இது.

நீா்ச்சத்து குறைந்தவுடன் சிறுநீரகங்கள், இதயத்தின் செயல்பாடு பாதிக்கும். உடனடியாக சிகிச்சையளிக்காவிடில் உயிரிழப்பு ஏற்படக்கூடும்.

தற்காப்பு முறைகள்...

  • நாள்தோறும் குறைந்தது 4 லிட்டா் தண்ணீா் அருந்துதல்

  • உச்சி வெயிலில் வெளியே செல்லாமல் இருத்தல்

  • காற்றோட்டமான பகுதியில் இருத்தல்

  • உடல் வெப்பநிலையைத் தணிக்க இருமுறை குளித்தல்

  • பருத்தி ஆடைகளை அணிதல்

  • மது, புகையைத் தவிா்த்தல்

  • எண்ணெய், கொழுப்பு உணவுகளைத் தவிா்த்தல்

  • அறிகுறிகளை அலட்சியப்படுத்தாது மருத்துவரை அணுகுதல்

ஹீட் ஸ்ட்ரோக் வாா்டுகள்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் வெப்பவாதம் எனப்படும் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புகளுக்கு பிரத்யேக வாா்டுகள்அமைக்கப்பட்டுள்ளன. குளிரூட்டப்பட்ட அந்த வாா்டுகளில் உயிா் காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தது 10 படுக்கைகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.

  • ஹீட் ஸ்ட்ரோக் உதவி எண்கள்... 104 மற்றும் 108.

-தொகுப்பு: ஆ.கோபி கிருஷ்ணா

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 107.76 அடியிலிருந்து 107.75 அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,397 கனஅடியிலிருந்து 1,235 கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணையில் இருந்து குடிந... மேலும் பார்க்க

ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில்: இன்று மீண்டும் சோதனை ஓட்டம்

ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட சோதனை ஓட்டம் இன்று மாலை 3 முதல் 6 மணி வரை நடைபெறுகிறது. பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9 கி.மீ. தொலைவுக்கு இந்த சோதனை ஓட்டம் நடக்கவுள்ளது. ஏற்கெனவே மார்ச் 20ஆம்... மேலும் பார்க்க

தில்லியில் இன்று பத்ம பூஷண் விருது பெறுகிறார் நடிகர் அஜித் குமார்

தில்லியில் நடிகர் அஜித்குமாருக்கு இன்று மாலை பத்மபூஷண் விருது வங்கப்படவுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா நிகழ்வின்போது பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி, 2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளை மீட்க வேண்டும்! - டாக்டா் கிருஷ்ணசாமி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளை அரசு உடனடியாக மீட்பதன் மூலம் மட்டுமே இந்திய மக்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பு கிடைக்கும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி தெரிவித்துள்... மேலும் பார்க்க

போக்குவரத்து ஓய்வூதியா்கள் அகவிலைப்படியை உயா்த்தி வழங்க முடிவு!

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை உயா்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் குடும்ப ஓய்வூதியம் பெறும் 20,000 போ் உள்பட 90,000-க்கும் மேற்பட்ட ஓய்வூதிய... மேலும் பார்க்க

பிரதமரின் ‘மனதின் குரல்’ ஒளிபரப்ப கெடுபிடி: திமுக அரசுக்கு நயினாா் நாகேந்திரன் கண்டனம்

பிரதமரின் ‘மனதின் குரல்’”நிகழ்ச்சியை ஒளிபரப்ப திமுக அரசு கெடுபிடியை கடைப்பிடிப்பது கண்டனத்துக்குரியது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா். பிரதமா் நாட்டு மக்களுடன் கலந்துரையாடும் ‘மனதின்... மேலும் பார்க்க