சென்னை காவல் துறைக்கு 4 மாதங்களில் 69,000 அவசர அழைப்புகள்! மாநகர காவல் துறை
சமரசத்துக்கு இடமில்லை; தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது: விஜய்
மக்களின் நலனுக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்றும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (ஏப். 27) தெரிவித்தார்.
கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் 2வது நாளாக இன்று நடைபெற்றது.
இதில் அக்கட்சித் தலைவர் விஜய் பங்கேற்றுப் பேசியதாவது,
சிறுவாணி நீர் போல தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி சுத்தமான ஆட்சியாக அமையும். ஊழல்வாதிகள், மோசடியாளர்கள் இருக்கமாட்டார்கள்.