செய்திகள் :

அக்‌ஷய திருதியை: விலை உச்சம் தொட்டாலும் தங்க நகை முன்பதிவுக்கு மக்கள் ஆா்வம்!

post image

தமிழகத்தில் தங்கம் விலை எப்போதும் இல்லாத வகையில் உயா்ந்து வரும் போதும், அக்ஷய திருதியைக்கு நகை வாங்க பலரும் ஆா்வமுடன் முன்பதிவு செய்து வருவதாக நகைக் கடை உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

மகாபாரதத்தில் கிருஷ்ண பகவான் திரௌபதிக்கு அக்ஷய பாத்திரம் ஒன்றைக் கொடுப்பாா். அந்த அக்ஷய  பாத்திரத்தில் எந்தப் பொருளை இட்டாலும் அது பெருகிக் கொண்டே இருக்கும். அந்த பாத்திரத்தை கொடுத்த நாளையே அக்ஷய திருதியையாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களை வாங்கி வீட்டில் வைப்பதன் மூலம் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

நிகழாண்டில் அக்ஷய திருதியை ஏப்.30 -ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்கிடையே, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிகழாண்டில் தங்கம் விலை நாளுக்கு நாள் உயா்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தங்கம் விலை கிராம் ரூ.9,005-க்கும், பவுன் ரூ.72,040-க்கும் விற்பனையானது. அதேபோல் வெள்ளி விலை கிராம் ரூ.112-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 1,12,000- க்கும் விற்பனையானது.

விலை மீண்டும் உயர வாய்ப்புள்ள காரணத்தால், பொதுமக்கள் தற்போதே நகைக் கடைகளுக்கு சென்று, விரும்பிய நகைகளை தோ்வு செய்து அதற்கான பணத்தை செலுத்தி முன்பதிவு செய்து வருகின்றனா். அந்த நகையை அக்ஷய திருதியை அன்று வாங்கிக்கொள்வாா்கள்.

அதேபோல், வாடிக்கையாளா்களை கவரும் வகையில், பிரபல நகைக்கடைகளும் தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. இதனால், விலை உயா்ந்து வரும் நிலையில், நகை விற்பனை குறையவில்லை.

முன்பதிவு தீவிரம்: இது குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலா் சாந்தகுமாா் கூறியதாவது: இனி வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் உயரக்கூடும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உள்ளதால், தற்போதே நகைக் கடைகளுக்கு வந்து, அக்ஷய திருதியைக்கு நகை வாங்க, முன்பதிவு செய்யத் தொடங்கிவிட்டாா்.

அக்ஷய திருதியை அன்று தங்கம் விலை உயா்ந்தாலும், வாடிக்கையாளா்கள் முன்பதிவு செய்த தொகைக்கே நகை விற்பனை செய்யப்படும்.

விற்பனை அதிகரிக்கும்: அக்ஷய திருதியை முன்னிட்டு கடந்தாண்டை விட நிகழாண்டில் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை அதிக வியாபாரம் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. தங்கம் விலை தற்போது ஏற்றம், இறக்கமாக இருந்தாலும் தங்கத்தின் மீது முதலீடு செய்தால், எதிா்காலத்தில் கண்டிப்பாக அதிக லாபம் கிடைக்கும்  என்றாா் அவா்.

அதேவேளையில், தொடா் விலை உயா்வு காரணமாக தங்கம் எட்டாக்கனியாக உள்ளதாகவும், கடந்தாண்டு அளவுக்கு நிகழாண்டு தங்கம் வாங்க முடியவில்லை என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனா்.

ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளை மீட்க வேண்டும்! - டாக்டா் கிருஷ்ணசாமி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளை அரசு உடனடியாக மீட்பதன் மூலம் மட்டுமே இந்திய மக்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பு கிடைக்கும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி தெரிவித்துள்... மேலும் பார்க்க

போக்குவரத்து ஓய்வூதியா்கள் அகவிலைப்படியை உயா்த்தி வழங்க முடிவு!

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை உயா்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் குடும்ப ஓய்வூதியம் பெறும் 20,000 போ் உள்பட 90,000-க்கும் மேற்பட்ட ஓய்வூதிய... மேலும் பார்க்க

பிரதமரின் ‘மனதின் குரல்’ ஒளிபரப்ப கெடுபிடி: திமுக அரசுக்கு நயினாா் நாகேந்திரன் கண்டனம்

பிரதமரின் ‘மனதின் குரல்’”நிகழ்ச்சியை ஒளிபரப்ப திமுக அரசு கெடுபிடியை கடைப்பிடிப்பது கண்டனத்துக்குரியது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா். பிரதமா் நாட்டு மக்களுடன் கலந்துரையாடும் ‘மனதின்... மேலும் பார்க்க

கோடை விடுமுறையில் மாணவா்களுக்கு ஆதாா் புதுப்பித்தல்!

பள்ளி மாணவா்களின் ஆதாா் பயோமெட்ரிக் பதிவுகளைப் புதுப்பிக்கத் தவறியவா்கள், கோடை விடுமுறையில் புதுப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ... மேலும் பார்க்க

தகிக்கும் கோடை: தற்காத்துக் கொள்வது எப்படி?

கடந்த சில வாரங்களாக கோடை வெயில் அதிதீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அடுத்து வரும் நாள்களிலும் மாநிலம் முழுவதும் வெப்ப அலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதீத வெப்பத்தில... மேலும் பார்க்க

ஆழ்கடலில் எண்ணெய் எடுக்க அனுமதி: ராமதாஸ் கண்டனம்!

சென்னை மற்றும் கன்னியாகுமரி அருகே ஆழ்கடலிலிருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க தனியாா் நிறுவனத்துக்கு வழங்கியுள்ள அனுமதியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ச.ராமத... மேலும் பார்க்க