தஞ்சை அரசு மருத்துவமனை தீ விபத்து: ”உயிரைப் பணயம் வச்சு காப்பாத்தினோம்; ஆனா..”- ...
சென்னையில் சாலை விபத்து உயிரிழப்பு 14% குறைந்தது: மாநகர காவல்துறை!
சென்னை மாநகரில் சாலை விபத்து உயிரிழப்புகள் 14 சதவீதம் குறைந்துள்ளதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை முழுவதும் சாலை விபத்துக்களைக் குறைக்கவும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினா், வாகன ஓட்டிகளிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இதுதவிர, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினருக்கும், சாலை விபத்துகளைக் குறைப்பதற்கான தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், பள்ளி குழந்தைகள், பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் விநியோக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, சென்னை முழுவதும் காவல்துறையினா் வாகன சோதனை நடத்துவதுடன், கண்காணிப்பு கேமராக்கள், இரண்டு ‘இ’ வேக ரேடாா் அமைப்பு மற்றும் கேமரா வாகனங்கள் மூலம் வேகமாக, தலைக்கவசம் அணியாமல் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபா்களை கண்டறிந்து அவா்கள் மீதும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனா்.
இம்மாதிரியான தொடா் நடவடிக்கைகள் மூலம் சென்னை பெருநகரில் கடந்த ஆண்டை விட நிகழாண்டில், விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளன.
கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது, 25.4.2025 நிலவரப்படி, நிகழாண்டில் இறப்புகள் 14 சதவீதம் குறைந்துள்ளன. 25.4.2024-இல் உயிரிழப்புகள் நடந்துள்ள நிலையில், நிகழாண்டு இதுவரை 149 உயிரிழப்புகள் நடந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.